பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் முயற்சி – தேவிபுரம் தையல் உற்பத்தி நிலையத்தின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் நேரில் ஆராய்வு!!
Wednesday, April 17th, 2024பெண் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேவிபுரம் பகுதியில் பெண் முயற்சிகாளர்களால் மேற்கொள்ளப்படும் நியூ லக்ஷ்மி தையல் உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் (17.04.2024) விஜயம் மேற்கொண்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த மாவட்டத்தின் பல்வேறு தரப்பினருடனும் கலந்தரையாடல்கள் மற்றும் கள விஜயங்களை மேற்கொண்டிருந்தார்.
இதன் ஓர் அங்கமாக முல்லைத்தீவு தேவிபுரம் நியூ லக்ஷ்மி தையல் உற்பத்தி நிலையத்திற்கு விஜயம் செய்து பெண் தொழில் முயற்சியாளர்களினால் மேற்கொள்ளப்படும் உற்பத்தி பொருட்களை பார்வையிட்டு அவர்களின் எதிர்பார்ப்புகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
பெண் தொழில் முற்சியாளரான விஜயலக்ஷ்மி என்பவரினால் நிறுவப்பட்டுள்ள குறித்த நிலையத்தில் தொழில் முயற்சிகளுக்கு மேலும் வலுச்சேர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கிலேயே அமைச்சரது குறித்த விஜயமர அமைந்தது குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|