பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கும் பொருத்தமான பொருளாதாரத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Wednesday, November 23rd, 2016

வடக்கு, மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்தம் காரணமாக அவயவங்களை இழந்து மாற்றுத் திறனாளிகளாக ஆக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் பெண் தலைமைத்துவங்களைக் கொண்ட குடும்பங்களின் எண்ணிக்கையும் மிகவும் அதிகமாகும். அத்துடன் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளும் அதிகளவில் பொருத்தமான வாழ்வாதாரங்கள் அற்ற நிலையில் மிகவும் கஷ்டமானதொரு வாழ்க்கையை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, இவர்களை இனம் கண்டு இவர்களுக்கான வாழ்வாதாரங்களை முன்னெடுக்கத்தக்க வகையில் போதிய கொள்கைத்திட்டம் ஒன்று அவசியமாக உருவாக்கப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளார்.

நேற்றுமுன்தினம்(21) 2017 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

தற்பொழுது நாட்டில் நடைமுறையிலுள்ள பொதுவான நிவாரணத் திட்டங்களால் எம்மக்களின் பிரச்சினைகளை முழுமையாகத் தீர்க்க முடியாது என்பதையும் இங்கு நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இவ்வாறான பிரச்சினைகள் எமது மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளாக மாத்திரமன்றி உணர்வு ரீதியான பிரச்சினைகளாகவும் உருவெடுத்துள்ளன. எனவே இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதற்கு உடனடியாக ஏற்பாடுகள் தேவை என்பதை இங்கு நான் வலியுறுத்த விரும்புகின்றேன் என தெரிவித்துள்ளார்.

13

 

Related posts:


சரியான தமிழ் அரசில் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக்கொண்டுள்ளோம் - மகிழ்ச்சியில் கிழக்கு மக்கள் !
வடக்கில் அதிகரித்துவரும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும் – டக்ளஸ்...
வரலாற்று முக்கியத்துவம் பெற்ற மயிலிட்டி துறைமுகத்தின் இரண்டாம் கட்ட புனரமைப்பு பணிக்ளை ஆரம்பம் - ந...