பெண்கள் தலைமைத்துவ குடும்பங்களுக்கு விஷேட பொருளாதார பொறிமுறை வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, October 10th, 2018

கடந்த கால யுத்தப் பாதிப்புகள் காரணமாகவே எமது மக்களில் பலர் – குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தங்களது வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்லுமுகமாக நுண் கடன் உட்பட நிதி நிறுவனங்களில் கடன் தொகைகளைப் பெற்றுள்ளனர். இதனால் இன்று அவர்கள் பெரும் கடன்காரர்களாகி, தற்கொலை செய்து கொள்கின்ற நிலை தொடர்கின்றது. மேலும், பல குடும்பங்கள் விவாகரத்தில் பிரிந்து வாழுகின்ற நிலையும் எமது பகுதிகளில் உருவாகி வருகின்றது. இவை எல்லாம் எமது சமூகத்தில் சொல்லொணா துயரங்களாகவே தொடர்கின்றன.

இத்தகைய நுண்கடன் பெற்றவர்களுக்கு ஒரு தீர்வாக இந்த அரசு ஒரு இலட்சம் ரூபாவிற்கு உட்பட்ட கடனாளிகளுக்கென ஒரு திட்டத்தினைக் கொண்டு வந்தபோதிலும், அதனது விண்ணப்பத்திற்குரிய தகைமைகள் தொடர்பில் அறிவிப்பதற்கான காலக்கெடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் அது அந்தளவிற்கு எமது மக்களுக்கு உரிய பயன்பாடுகளைத் தரவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

மேலும், மேற்படி கடன் திட்டங்கள் தொடர்பில் அரச மட்ட தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றபோது, அது கடன் பெற்ற எமது மக்களுக்கு கடன் கொடுத்தவர்களால் பாரிய அழுத்தங்களை வெவ்வேறு வடிவங்களில் மேற்கொள்வதற்கும்; வழிவகுத்து வருவதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

எனவே, அந்த மக்களைப் முழுமையாக தற்போதைய கடன் தொல்லை நிலைமைகளில் இருந்து மீட்பதற்கு ஏதுவானதான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்வதற்கும,; இந்த அலுவலகத்தின் ஊடாக வழிவகைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அந்தவகையில் இந்த அலுவலக சட்டமூலத்தில் குடும்பங்களின் தலைமைத்துவத்தினை ஏற்றிருக்கின்ற பெண்கள் தொடர்பில் விசேட செயற்திட்டங்களை மேற்கொள்வது தொடர்பிலான விடயமும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற இழப்பீடுகளுக்கான எதிரீடுகள் வழங்குதல் தொடர்பிலான அலுவலகம் தொடர்பில் இடம்பெறுற்ற  விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts:


நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் வீம்புக்காகவோ, அன்றி அரசியல் காரணங்களுக்காகவோ போராட்டங்களை நடத்தவ...
தொண்டர் ஆசியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட வேண்டும் என்ற செயலாளர் நாயகத்தின் கோரிக்கைக்கு நாடாள...