பூவக்கரை கலைமகள் சனசமூக நிலைய கட்டிடம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு !

Sunday, January 1st, 2017

புனர்நிர்மானம் செய்யப்பட்ட பூவக்கரை கலைமகள் சனசமூக நிலைய கட்டிடத்தையும் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் திட்டத்தையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்து மக்களது பாவனைக்கு கையளித்துள்ளார்.

நேற்றுமுன்தினம் குறித்த சனசமூக நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்திருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா புனரமைக்கப்பட்ட கட்டிடத்தையும் குடிநீர் தாங்கியையும் நாடா வெட்டி சம்பிரதாயபூர்வமாக திறந்துவைத்து மக்களிடம் கையளித்துள்ளார்.

IMG_20161231_145748

ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி பிரதேச நிர்வாகத்தினரிடம் குறித்த சனசமூக நிலைய நிர்வாகத்தினர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு குறித்த கட்டிடமும் குடிநீர் வசதியும் பெற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது.

IMG_20161231_145858

குறித்த சனசமூக நிலைய பகுதியில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தில் நிடைபெற்ற நிகழ்வுகளிலும் செயலாளர் நாயகம் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் கலைமகள் சனசமூக நிலையத்தின் நிர்வாகத்தினரால் நூலகத்திற்கு நூல்களை பெற்றுத்தருமாறு விடுத்த கோரிக்கையையும் ஏற்றுக்கொண்டு 2017 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் நிதி ஒதுக்கீடு செய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

IMG_20161231_150044

இந்நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் கட்சியின் வடமராட்சி பிரதேச ஒருங்கிணைப்பாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்)  கட்சியின் கரவெட்டி பிரதேச நிர்வாக செயலாளர் செந்தில்நாதன், கட்சியின் பருத்தித்துறை பிரதேச நிர்வாக செயலாளர் விசுந்தன் குறித்தபகுதி கிராமசேவையாளர் மற்றும் பொருளாதார உத்தியோகத்தர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

DSCF0650

DSCF0641

DSCF0627

IMG_20161231_150457

DSCF0702

Related posts: