பூநகரி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை பூநகரி பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கப் பிரதிநிதிகளும் நாச்சிக்குடா குமுழமுனை கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகளும் சந்தித்துத் தமது பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாணத்திலுள்ள கட்சியின் அலுவலகத்தில் இன்றைய தினம் (16) மேற்படி சந்திப்புக்கள் இடம்பெற்றிருந்தன.
முன்பதாக குமுழமுனை கிராம அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் தாம் எதிர்நோக்கிவரும் இடர்பாடுகளை டக்ளஸ் தேவானந்தாவுக்கு எடுத்து விளக்கியிருந்தனர். இதில் குறிப்பாக காணிப் பிரச்சினை வாழ்வாதாரம் தொழிற்துறை சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக எடுத்துரைத்தனர்.
இதுவிடயம் தொடர்பில் கவனம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா துறைசார்ந்தோருடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
இதனிடையே பூநகரி பனை தென்னைவள அபிவிருத்திச் சங்கப் பிரதிநிதிகள் தாம் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகளை எடுத்துரைத்தனர்.
அதன் பிரகாரம், பனை சார்ந்த தொழிற்துறையை நம்பிவாழும் குடும்பங்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலுள்ள நெருக்கடிகள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். குறித்த விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய டக்ளஸ் தேவானந்தா தாம் துறை சார்ந்தோருடன் கலந்துரையாடி அதற்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதற்கான முயற்சிகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும், வடமாகாண சபை உறுப்பினருமான வை.தவநாதன், கட்சியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் (கி.பி) மற்றும் கட்சியின் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் இரத்தினம் அமீன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related posts:
|
|