புலி சீருடை விவகாரம் – பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் – இளைஞனின் பெற்றோரிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Friday, December 29th, 2023புலி சீருடை விவகாரத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்ட இளைஞனுக்கு பிணை கிடைத்தமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி கூறுங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த இளைஞனின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நேற்று (29.12.2023) இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடலின் பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட இளைஞன் தனது பெற்றோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்த நன்றி தெரிவித்தபோதே போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நீங்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள எனது அலுவலகத்திற்கு வருகைதந்து மகனை விடுவித்து தருமாறு கோரியதும் உங்கள் மகனின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசியில் நான் பேசினேன்.
இதையடுத்து ஜனாதிபதியே சட்டமா அதிபரை தொடர்பு கொண்டு பிணை வழங்குவதற்குரிய ஏற்பாடுகளை செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கே நீங்கள் நன்றி கூற வேண்டும்.
ஆகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும்போது அவருக்கு உரிய நன்றியை நீங்கள் கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த வழக்கிலிருந்து உங்கள் மகனை முழுமையாக விடுவிப்பதற்குரிய ஏற்பாடுகள் கால கிரமத்தில் சாத்தியமாகும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
முன்பதாக தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்புடன் தொடர்புடைய ரீசேர்ட் அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவனம் செலுத்தி உரிய தரப்புக்களுடன் கலந்துரையாடியதுடன் இது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்று நிலமைகளை எடுத்துக் கூறி சாதகமான நிலமையை உருவாக்கியிருந்தார் .
பயங்கரவாத தடைச்சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யூட் சுரேஸ்குமார் டனுஜன் வயது23 என்ற இனைஞரை பிணையில் விடுவிப்பதற்கு சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்காததையடுத்து இன்றையதினம் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குறித்த இளைஞரை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைது செய்யப்பட்ட இளைஞனின் பெற்றோர் கடந்த 01.12.2023 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து குடும்ப நிலையை எடுத்துக்கூறியதுடன், மகனின் விடுதலைக்கு உதவுமாறும் கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, குறித்த இளைஞனின் பெற்றோருக்கு நம்பிக்கையளித்த அமைச்சர், சஞ்சலமடைந்து தேவையற்ற பண விரயங்களை செய்யாமல் பொறுமையாக இருக்குமாறும் ஆறுதல் தெரிவித்து அனுப்பி வைத்திருந்தது நினைவு கூரத்தக்கது.
000
00
Related posts:
|
|