புலம்பெயர்ந்த தமிழ் மக்களை திருப்பி அழைக்க வேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 18th, 2016

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களே இன்னமும் முழுமையாக தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பத நிலையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை திரும்பி அழைக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே இன்று எழுகின்றன. இதுதொடரட்பில் அனைவரும் சிந்திக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை திரும்பி அழைக்க வேண்டும் என்ற குரல்கள் ஆங்காங்கே இன்று எழுகின்றன. ஆனாலும் ஒரு விடயத்தை சகலரும் சிந்திக்க வேண்டும். யுத்தம் மட்டுமே இங்கு முடிவிற்கு வந்திருக்கின்றதே ஒழிய  யுத்தத்தினால் உருவான வடுக்கள் இன்னும் தீரவில்லை.

உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களே இன்னமும் முழுமையாக தமது சொந்த வாழ்விடங்களுக்கு திரும்பவில்லை. வீழ்ச்சியடைத்த தொழில் துறைகளும் பொருளாதார வளங்களும் இன்னமும் தூக்கி நிறுத்தப்படவில்லை. எமது மக்கள் தமது சொந்த காலில் நிமிர்ந்து நிற்கும் சுய பொருளாதார பொறிமுறைகள் இன்னமும் முழுமை பெறவில்லை. அதை விட நிரந்தர அரசியல் தீர்வு இன்னமும் காணப்படவில்லை.

இவைகள் அனைத்தும் உறுதிப்படுத்தபட்ட பின்னரே புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை திரும்பி அழைப்பது குறித்து சிந்திக்க முடியும். இது குறித்து நாம் ஜனாதிபாதி அவர்களுடனும் பிரதமர் அவர்களுடனும் மற்றும் சம்பந்தப்பட்ட சர்வதேச சமூகத்திடமும் பிரத்தியேகமாக சந்தித்து வலியுறுத்த உள்ளோம் என தெரிவித்துள்ளார்.

123

Related posts: