புரவி புயலால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களின் விபரங்கள் ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் – அனைத்து பிரதேச செயலாளர்களிளுக்கும் அமைச்சர் டக்ளஸ் பணிப்பு.

Sunday, February 7th, 2021

புரவி புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்களின் விபரங்களை தருமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கடற்றொழிலாளர்களது பிரச்சினைக்ள் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அமைச்சர் இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –  புரவிப் புயலால் பாதிக்கப்பட்ட யாழ் மாவட்ட மீனவர்கள் தொடர்ப்பில் அறிக்கைகள் தயாரிக்கப்பட்டாலும் சிலரது பெயர்கள் விடுபட்டதாககச் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில்அது தொடர்பில் சகலரது கோரிக்கைகளையும் உள்வாங்கி ஒரு வார காலத்துக்குள் தரவுகளை தமக்கு அனுப்பி வைக்குமாறு அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: