முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும் – புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
Friday, November 18th, 2016புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் எதுவிதமான வாழ்வாதார வசதிகளும் இன்றி நீண்டகாலமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அவதானத்தில் கொண்ட விஷேட திட்டம் ஒன்று வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இச் சபையில் நான் முன்வைக்கின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் நாடாளுமன்றில் புதிய ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களையும் புதிய தொழில் முயற்சியாளர்களையும் ஊக்குவிக்கக்கூடிய பல திட்டங்கள் காணப்படுகின்றன. இத்திட்டங்களில் இயலுமானவரை மேற்படி முன்னாள் போராளிகளையும் இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.
Related posts:
|
|