புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில்டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அரசு ஒப்புதல்.

Friday, June 24th, 2016

தேசிய அடையாள அட்டை இலத்திரனியல் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் முன்வைத்திருப்பதை வரவேற்கின்றேன்.அதேவேளை தற்போது தமிழ் பேசும் மக்களின் அடையாள அட்டைகளில் தமிழிலும், சிங்களத்திலும் எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் சிங்கள மக்களின் அடையாள அட்டைகளில் தனியே சிங்கள மொழியில் மட்டுமே இருக்கின்றது. இந்த நிலைமை மாறவேண்டும். புதிதாக அடையாள அட்டையை இலத்திரனியல் அட்டையாக மாற்றம் செய்யும்போது,அதில் தமிழ், சிங்களம் மொழிகளுடன் ஆங்கிலத்தையும் உள்ளடக்க வேண்டும்.அத்தகைய பன்மைத்துவம் ஏற்படுத்தப்படுகின்றபோதுதான் தேசிய நல்லிணக்கம் பலப்படுத்தப்படும். ஆங்கிலம் உள்ளடக்கப்பட்டால்எமது மக்கள் வெளிநாடுகளுக்கு செல்லும்போது தேவையேற்படுமிடத்து அடையாள அட்டையை உறுதிப்படுத்த வசதியாக இருக்கும் என்று டக்ளஸ் தேவானந்தா பா.உ அவர்கள் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கோரிக்கைவிடுத்தார்.

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வதாக பிரதமர் தெரிவித்தார்.தற்போது பதினாறு வயது நிரம்பியவர்களே அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் தகுதிவாய்ந்தவர்களாக கருதப்படும் வயதெல்லையானது எதிர்காலத்தில் பதினைந்து வயதாக குறைக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கம் 22.06.2016 ஆம் திகதிநாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் அடையாள அட்டையில் மும்மொழி அமுலாக்கம் அவசியமென வலியுறுத்தியது தொடர்பாக மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,கடந்த காலத்தில் யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் இடப்பெயர்வுகளையும்,ஆவண ரீதியான பதிவுகளையும் முறையாகப் பின்பற்றவில்லை.

ஆகையால் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்வதிலும், தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்வதிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நன்மைகளை தமிழ் மக்கள் இழக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன்,வாக்காளர் எண்ணிக்கை குறைவு காரணமாக நாடாளுமன்ற உறுப்புரிமைகளையும் இழக்கும் ஆபத்தையும் எதிர்கொண்டிருக்கின்றார்கள்.

எனவே தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிப்பதுடன்,தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்வதையும் அக்கறையோடு செய்யவேண்டும் என்றும் இவ்விடயத்தில் கிராம சேவையாளர்களுடன் இணைந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினர்களும்,மக்களுக்கு தேவையான உதவிகளையும்,விழிப்புனர்வையும் வழங்குவார்கள் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.

Related posts:

வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன - மன்ற...
மக்கள் நிம்மதியுடன் வாழும் சூழல் தோற்றுவிக்கப்படும் வரை எமது அரசியல் பயணம் தொடர்ந்து பயணிக்கும் - மன...
ஒரு தொலைபேசி அழைப்பில் மக்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கக்கூடிய விடயங்களுக்கு கூட ஏனைய தரப்புகளால் த...