புதிய ஆண்டில் நல்ல தீர்வு கிடைக்கும் – நம்பிக்கையுடன் பணிகளை தொடருங்கள் – நியமனம் கிடைக்காத டெங்கு ஒழிப்பு பணியாளர்களிடம் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

சுகாதார அமைச்சினால் 2017 ஆண்டு டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்திற்காக ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பணியாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமது நிரந்தர நியமனம் தொடர்பாக கலந்துரையாடினர்.
ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடம் சேவையாற்றிய பின்னர் நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்ற உத்தாரத்தில் கடந்த அரசாங்கத்தினால் தாம் உள்வாங்கப்பட்ட போதிலும் கடந்த அரசாங்கம் உத்தரவாத்தினை நிறைுவேற்றவில்லை எனவும், தற்போது 5 வருடங்களாக தாம் நிரந்தரமாக்கப்படாமல் இருப்பதாகவும் குறித்த பணியார்கள் தெரிவித்தனர்.
மேலும், யாழ்ப்பாணத்தில் 78 பேர் உள்ளடங்கலாக நாடளாவிய ரீதியில் சுமார் 1069 பேர் நிரந்தர நியமனத்தினை எதிர்பார்த்திருப்பதாகவும், தமது நிலையினை அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்து நல்லதொரு எதிர்காலத்தினை தமக்குப் பெற்றுத் தருமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்விவகாரம் ஏற்கனவே அமைச்சரவையில் பேசப்பட்டிருப்பதாகவும், புதிய ஆண்டில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பணிகளை தொடருமாறும் கேட்டுக் கொண்டார்
Related posts:
|
|