பிற நாடுகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களின் பலநாள் படகுகளை விடுவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, March 9th, 2021

பல நாள் கடற்றொழில் கலன்களில் சர்வதேச கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்று இயந்திரக் கோளாறு மற்றும் எல்லைதாண்டிய பயணம் என்ற காரணங்களால் பிற நாடுகளின் கடற்படையினரால் பிடிக்கப்பட்ட இலங்கை படகுகளை விடுவிப்பது தொடர்பான முயற்சிகளை அமைச்சர் கடற்றொழில் டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்துள்ளார்.

இதனடிப்படையில் சர்வதேச கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று இயந்திரக் கோளாறு மற்றும் எல்லைதாண்டிய பயணம் போன்ற காரணங்களால் இந்தியா, மியன்மார் போன்ற நாடுகளில் பிடிக்கப்பட்ட இலங்கைப் படகுகளை விடுவிப்பது தொடர்பாக படகுகளின் உரிமையாளர்கள் இன்றையதினம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை கடற்றொழில் அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தமது படகுகள் கிடைக்கப்பெறாமையால் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எடுத்தக் கூறியிருந்தனர்.

இதையடுத்து குறித்த பலநாள் கலன்களை இலங்கைக்கு கொண்டுவருவது தொடர்பிலான முயற்சிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் பணித்துள்ளார்.

முன்பதாக மாலைதீவில் இருந்த இலங்கை கடற்றொழிலாளியின்  சடலத்தை நாட்டிற்கு எடுத்து வந்து உறவினர்களிடம் கையளிப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை மேற்கொண்டிருந்தார்.

அத்துடன் குறித்த சடலத்தை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான 972,847 ரூபாய்களை கடற்றொழில் அமைச்சினால் வெளிநாட்டு விவகாரங்கள் அமைச்சிற்கு வழங்கி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்லேயே குறித்த சந்திப்பு இன்றையதினம் இடம்பெற்றிருந்த நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நலன்புரி முகாம்களை மூடுவதால் மட்டும் மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது! - டக்ளஸ் தே...
நாம் பெற்றுக்கொண்ட  அனுபவங்களினூடாக தெளிவான நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளோம் - முல்லைத்தீவு மக்கள் பிர...
எந்த சூழ்நிலையிலும் சேவையை முன்னெடுக்கும் ஆற்றலுள்ள குமுதினியைப் போன்று மற்றுமொரு படகு நவீன வசதிகளுட...