பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருக்கின்றது
Friday, September 29th, 2017
ஒரு நாட்டில் நிலவுகின்ற பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு இந்தக் கட்சியிடம் இருப்பதன் காரணமாக, அந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் நடாத்தப்படுகின்ற இந்த மாநாடானது, அரசியல் ரீதியில் தெளிவுகளைப் பெற வேண்டிய அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எண்ணுகின்றேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டை ஒட்டி வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21ஆவது தேசிய மாநாடு கலந்துகொண்ட செயலாளர் நாயகம் அவர்கள், அந்த மாநாடு சிறப்பாக நடைபெறுவதற்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். அந்த வாழ்த்துச் செய்தியில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருக்கும், Nதூழர்களுக்கும் எமது மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவிப்பதுடன், எமது நாட்டைப் பொறுத்த வரையில் பொதுவாக ஏனைய அரசியல் கட்சிகளின் மாநாடுகள் போலல்லாது, கம்யூனிஸக் கட்சியின் தேசிய மாநாடு சில தினங்களாக தொடர்ந்து நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இது, இடதுசாரி இயக்க அரசியலின் ஆரம்பத்திலிருந்து இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில் இந்த மாநாடும் இன்று (29) தொடக்கம் எதிர்வரும் 01ஆம் திகதி வரை மூன்று நாட்களாக நடைபெற இருப்பது ஒரு விN~ட அம்சமாகும்.
ஒரு நாட்டில் நிலவுகின்ற பிற்போக்கான சமூக அமைப்பினை மாற்றியமைப்பதற்கான அர்ப்பணிப்பு இந்தக் கட்சியிடம் இருப்பதன் காரணமாக, அந்த நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு சர்வதேச மற்றும் தேசிய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆழமான ஆய்வுகளை மேற்கொள்ளும் வகையில் நடாத்தப்படுகின்ற இந்த மாநாடானது, அரசியல் ரீதியில் தெளிவுகளைப் பெற வேண்டிய அனைத்துத் தரப்பினருக்கும் ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எண்ணுகின்றேன்.
இன்று எமது நாடு பொருளாதார ரீதியில் பாரியளவில் பாதிப்புகளுக்கு உட்பட்டு வரும் நிலையில், நாட்டில் இருக்கக்கூடிய மனித வளங்கள்கூட உரிய பயன்பாடுகளுக்கு உட்படுத்தப்படாமல், வீணடிக்கப்படுகின்ற நிலையில், உலகமயமாக்கலுக்கு ஏற்ப, மனித வளப் பயன்பாடுகள் தொடர்பில் இந்த மாநாடு தனது உரிய அவதானங்களைச் செலுத்தும் என நம்புகின்றேன்.
ஆரம்ப காலத்தில் எமது நாடாளுமன்றம,; தொழிலாளர்கள் சார்ந்த மற்றும் பரந்தளவிலான மக்கள் சார்ந்த பிரதிநிதிகளையே கொண்டிருந்த நிலை இருந்தது. இன்று அது மாறி, வெறும் இனங்கள் சார்ந்த பிரதிநிதிகளைக் கொண்டதாக எமது நாடாளுமன்றம் அமைந்துள்ள நிலையே காணப்படுகின்றது. இவ்வாறான ஒரு நிலையில், இலங்கை கம்யூனிஸக் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகளின் தேவை குறித்து இந்த நாட்டில், குறிப்பாக சிறுபான்மை சமூகங்களிடையே இன்று உணரப்படுகின்றது.
இலங்கை கம்யூனிஸக் கட்சியானது தமிழ் பேசுகின்ற எமது மக்கள் தொடர்பில் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வந்துள்ளது. அது மட்டுமன்றி, தமிழ் பேசும் மக்களின் உரிமைகள் தொடர்பில் சகோதர சிங்கள மக்களிடத்தேயும் ஆரோக்கியமான கலந்துரையாடல்களுக்கு வித்திட்டு, அத்தகைய கலந்துரையாடல்களை தொடரக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி இருக்கின்றது.
எமது நாட்டில் தமிழ் பேசும் மக்களுக்கு சுய நிர்ணய உரிமை மற்றும் பிரதேச சுயாட்சி வேண்டும் எனும் தீர்மானங்களை முதன் முதலில் எடுத்ததும் இலங்கை கம்யூனிஸக் கட்சியாகும்.
எனது தந்தையார், பெரிய தந்தையார், மாமனார் போன்றோர் இலங்கை கம்யூனிஸக் கட்சியைச் சேர்ந்த முக்கிய செயற்பாட்டாளர்களாக விளங்கியவர்கள். இவர்களது வழிகாட்டல்கள் மற்றும் ஊக்குவிப்புகளுடன் இடதுசாரி அரசியலை நானும் ஏற்றுக் கொண்டு, இன்று வரையில் அதன் கொள்கை, கோட்பாடுகளின் பிரகாரமே வாழ்ந்தும், செயற்பட்டும் வருகின்றேன். எனது இந்த போக்கே இன்று எமது நாட்டின் அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களிடையேயும் என்னை இனங்காட்டியுள்ளது என எண்ணுகின்றேன்.
இதன் காரணமாகவே குறுகிய இனவாத, மதவாத, சாதிபேத முறைமைகளுக்கு அப்பால் நின்று எமது மக்களுக்காக எம்மால் உழைக்க முடிகின்றது.
எமது இந்த மக்கள் நலன்சார்ந்த பணிகளுக்கு இலங்கை கம்யூனிஸக் கட்சி உட்பட்ட இடதுசாரி அரசியல் கட்சிகளின் ஒத்துழைப்புகள் என்றும் தேவை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.
அந்த வகையில், இன்று இங்கு ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இந்த மாநாடு அனைத்து வகையிலும் வெற்றிகரமாக அமைந்து, நிறைவு காண எமது மக்கள் சார்பாக எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றும் தெரிவித்தார்.
Related posts:
|
|