பிறந்த நாளை கொண்டாடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இந்துமத பீடம் ஆசி!

Tuesday, November 10th, 2020

ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் செயலாளர் நாயகமும், யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (10.11.2020) தனது 63 ஆவது பிறந்ததினத்தை கொண்டாடுகின்றார்.
இந்நிலையில் அவருக்கு சர்வதேச இந்துமத பீடம் சார்பாக சிவஸ்ரீ கலாநிதி இராமச்சந்திர குருக்கள் பாபுசர்மா தனது ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

குறித்த வாழ்த்துச் செய்தியில், – 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறையை சரியாக செயற்படுத்தி தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்னோக்கி நகர்த்துவதில் தொடர்ந்தும் தமது கருத்தை வலியுறுத்தி வருவதுடன், வெறுமனே அரசியல் தீர்வு மட்டும் பேசாமல் அன்றாடம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கவேண்டும் என்பதிலும் உறுதியாக செயற்பட்டு வரும் அவருக்கு இறைவன் ஆசீர்வதிப்பதோடு அவருக்கு எல்லா வளங்களும் கிடைக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்துக்கது

Related posts:

தமிழ் பேசும் மக்களின் அரசியல் சமூக பொருளாதார மீட்சிக்கு அரசாங்கம் வழிதிறந்து விடவேண்டும் - புதிய பாத...
குடிநீர் பிரச்சினைகு தீர்வு பெற்றுத் தாருங்கள் – டக்ளஸ் எம்.பி.யிடம் வேலணை கண்ணபுரம் பகுதி மக்கள் கோ...
பயனாளிகளுக்கு நியாய விலையில் மணல் கிடைக்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ்...