பிரதேச சபைகளிலுள்ள சுகாதாரப் பணியாளர் பிரச்சினைகளை தீர்வு பெற்றுத்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கரைச்சி பிதேச சபை தவிசாளர் கோரிக்கை!

கிளிநொச்சி மாவட்டத்தின் பால் தேவையைக் கவனத்தில் கொண்டு மாடு வளர்ப்பிற்கு முக்கியத்துவம் அளிக்குமாறும் அதேபோன்று ஆடு வளர்ப்பிலும் தேவையான அக்கறை செலுத்துமாறும் சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், குறித்த ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றுள்ளது.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டு பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடினர்
மேலும் பிரதேச சபைகளில் காணப்படுகின்ற சுகாதாரப் பணியாளர்களுக்கான பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் விசேட தீர்மானத்தினை பெற்றுத் தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை முன்வைத்துள்ள கரைச்சி பிதேச சபை தவிசாளரான வேழமாலிகிதன், இராணுவப் பயன்பாட்டில் இருக்கின்ற கரைச்சி பிரதேச சபை நூலகத்திற்கான பகுதிக் கட்டிடத்தினையும் விடுவித்துத் தருமாறு கோரிக்கை முன்வைத்துள்ளார்.
Related posts:
|
|