பிரதமர்  ரணில் விக்கிரம சிங்கவுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரவு!

Wednesday, April 4th, 2018

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லாப் பிரேரணை இன்று இரவு வாக்கெடுப்புக்கு வரவுள்ளது. இந்நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக தீர்மானித்துள்ளது.

கூட்டு எதிரணியினரால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகக் கொண்டவரப்பட்ட குறித்த நம்பிக்கையில்லா பிரேரணை மீதான விவாதம் தற்போது நடைபெற்றுவருகின்றது.

குறித்த விவாதம் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ச்சியாக 11 மணித்தியாலங்கள் விவாதிக்கப்பட்டுவரும் நிலையில் இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இந்நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கு இடையே நடைபெற்ற பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னர் பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பதாக செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முடிவு செய்துள்ளமை குறிப்பித்தக்கது.


யாழ். மீன்பிடித் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகவும், விரைவாகவும் தீர்வு காண்பேன். அமைச்சர...
வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா
புதிய அரசியலமைப்பில் சிறுபான்மை இனங்களின் பாதுகாப்பும், உரிமைகளும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் - ஊடகவ...
60 வருடத்தில் பல முறை பிறந்தவர் - அவர்தான் டக்ளஸ் தேவானந்தா!
வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...