பிரதமர் ரணில் உடனடியாக அதிகாரங்களை பயன்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல் !

Monday, July 11th, 2022

நிலைமைகள் மேலும் மோசமடைவதை தடுக்கும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தனக்கிருக்கின்ற அதிகாரங்களை பயன்படுத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறாத நிலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கான கொடுப்பனவுகள் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாமல் இருக்கின்றமை தொடர்பாக, இன்று சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “ஏற்கனவே எரிபொருளுக்காக மக்கள் நாள் கணக்கில் வீதியில் நிற்கின்ற நிலையில், கிடைக்கின்ற எரிபொருளையும் தாமதப்படுத்தும் வகையில் செயற்பாடுகள் அமையுமாயின், மின்வெட்டு உட்பட்ட பல மோசமான விளைவுகளை நாடு எதிர்கொள்ள நேரிடும்.

தற்போதைய நிலையில் நாடடின் நலன் கருதி அமைச்சரவையின் ஒத்துழைப்புடன், பிரதமர் விடயங்களை கையாள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Related posts:


புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்பது கானல் நீராகவே இருக்கும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
யாழ் முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவிப்பு!
கடற்றொழில் அமைச்சின் செயற்திட்டங்கள் மக்களை நோக்கியதாக முழுமையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது – நாட...