பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் தொடருவதற்கு நீங்கள்தான் காரணம்: மக்கள் மீது குற்றச்சாட்டினார் அமைச்சர் டக்ளஸ்!

Saturday, June 27th, 2020

தமிழ் மக்களின் பிரச்சினைகள் முழுமையாக தீர்க்கப்படாமல் இருப்பதற்கு மக்கள் பிரதிநிதிகளை குற்றஞ்சாட்டத் தயாராக இல்லை என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்களிள் தவறானவர்களை தெரிவு செய்தமையே இதற்கு காரணம் என்று தெரிவித்தார்.

வலி கிழக்கு வாழைக் குழை உற்பத்தியாளர் கூட்டுறவாளர் சங்கத்தினால் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

கடந்த காலங்களில் மாகாண சபையின் ஊடாக பல்வேறு திட்டங்கள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அவை எவையும் கைகூடவில்லை என்று அங்கு வந்திருந்தவர்களினால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள பிரதிநிதிகளை குற்றஞ்சாட்டுவதை தான் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் தவறான பரப்புரைகளை நம்பி தவறான திசையில் மக்கள் சென்றிருந்தமையினால் தனக்கு போதுமான அதிகாரங்கள் கிடைக்கவில்லை எனவும், அதனால் ஒரு மட்டுப்படுத்த அளவிற்கு  மேல் தன்னால் சாதிக்க முடியவில்லை எனவும் தெரிவித்தார்.

எனவே, எதிர்காலத்திலாவது மக்கள் யதார்த்ததினை புரிந்து கொண்டு செயற்பட்டால் எதிர்வரும் சில வருடங்களுக்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் தன்னால் தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.

Related posts: