பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன் ஏற்றுமதித் தொழிற்றுறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023


……..

கொரோனா தொற்று பரவிய காலப்பகுதியில் பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் தொழிற்றுறையானது தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதை அவதானிக்கின்றோம்.

அந்த முயற்சிகளுக்கு கடற்றொழில் அமைச்சும், எமது நெக்டா நிறுவனமும் கூடுதல் கவனமெடுத்து வருகின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
.
தப்பிரபோன் நிறுவனத்தினரால் கொழும்பில் இன்று (07.10.2023) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “அக்கியுவா பியஸ்டா” எனும் அலங்கார மீன்கள் கண்காட்சி நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் –
.
நன்னீர் வேளாண்மைக்காக நெக்டா நிறுவனத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நூறு மில்லியன் ரூபாய்களை ஒதுக்கியுள்ளார்.

அந்த நிதியிலிருந்தும் அலங்கார மீன்வளர்ப்புத் துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கவுள்ளதாகவு  தெரிவித்த அமைச்சர், அலங்கார மீன் வளர்ப்பு மற்றும் ஏற்மதித் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை பாராட்டியதுடன், தொடர்ந்தும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க அமைச்சுடன் இணைந்து செயலாற்றுவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சின் செயலாளர், நெக்டா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் தொழில் முயற்சியாளர்களும் கலந்து கொண்டனர்.
000

Related posts:

எது நடக்கக் கூடாது என்று விரும்பினேனோ, துரதிஸ்டவசமாக அது நடந்திருக்கின்றது – ஊடகக் செய்தியில் அமைச்ச...
செங்குந்தா இந்துக் கல்லூரி மைதான பெயர் பலகையை திரை நீக்கம் - பாரம்பரிய மரபுரிமை பொங்கல் விழாவினையும...
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தனவுடன் யாழ்ப்பாணம் வந்தடைந்த புகையிரதத்தை வரவேற்றார் அமைச்சர் ...

திருமலை சல்லிஅம்மன் மீன்பிடி இறங்குதுறை புனரமைப்பிற்கான முதற்கட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் அமைச்...
அந்தோனிபுரம் கடற்றொழில் கிராமத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் - மாதர் சங்கத்தினருக்கான கருவாடு பதனிடு...
அமைச்சர் டக்ளஸ் விடா முயற்சி - சாந்தன் மீண்டும் நாடு திரும்புவதில் எந்தவித தடையும் இல்லை என வெளிவிவக...