பாரதப் பிரதமர் மோடியின் வருகையை தமிழ் தரப்பினர் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 11th, 2017
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் தனது இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்ற இச் சந்தர்ப்பத்தை எமது மக்களது நலன்களை முன்வைத்து அவருடனான சந்திப்பினை பயன்மிக்கதாக தமிழ் தரப்பினர் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இந்திய அரசு எமது மக்களுக்கென பல்வேறு பாரிய உதவிகளை தொடர்ந்தும் செய்து வருகின்றது. அந்த வகையில் கடந்த காலங்களில் இந்திய அரசுடன் கலந்துரையாடி எமது மக்களின் நலன் கருதியதாக 50 ஆயிரம் வீட்டுத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை நாம் பெற்றிருக்கின்றோம். எனவே, நியாயமான கோரிக்கைகளை எமது மக்கள் சார்ந்து முன்வைத்தால், இந்தியா நிச்சயமாக எமது மக்களுக்கு உதவும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.
அந்த வகையில், எமது மக்களின் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு தேவைகள் குறித்து பாரதப் பிரதமருடன் கலந்துரையாடி, இந்தியாவின் உதவிகளைப் பெறுகின்ற வகையிலேயே தமிழ்த் தரப்பினர்களது பாரதப் பிரதமருடனான சந்திப்புகள் இடம்பெறுவதே ஆரோக்கியமானதாக அமையும். அதைவிடுத்து, தமது சுயலாபங்கள் கருதியதாக இச் சந்திப்பைத் தமிழ் தரப்பினர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள் எனில், அது எமது மக்களுக்கு செய்கின்ற மேலுமொரு துரோகமாகவே அமைந்துவிடும் என டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடக்கில் பாடசாலைகள் புனரமைப்பிற்கு இந்திய உதவி வரவேற்கத்தக்கது! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவான...
வடக்கின் அபிவிருத்தி அமைச்சு என்பது மக்களின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்தது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவா...
கிளிநொச்சி மாவட்டத்துக்கு வரவு செலவுத்திட்ட நிதியில் ஒதுக்கப்பட்டுள்ள 545 மில்லியன் நிதியை வெளிப்படை...