பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்படும் நிதியை யுத்தம் செய்வதற்கொன கூறி வீண் புரளியைக் கிளப்பாதீர்கள் – நாடாளுமன்றில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Saturday, November 21st, 2020

 ‘மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்’ என்பது போல், பாதுகாப்பு அமைச்சுக்கென ஒதுக்கப்பட்டுள்ள நிதித் தொகையானது யுத்தம் செய்வதற்காக எனும் சுயலாபம் கருதிய வீண் புரளியைக் கிளப்பக் கூடாது.

பாதுகாப்பு அமைச்சு என்பது அதிகளவிலான ஆளணிகளை வைத்துக் கொண்டு பராமரிக்கின்ற ஓர் அமைச்சு மட்டும் அல்ல. அனைத்து இன மக்களும் பாதுகாப்பாக வாழக் கூடிய சூழலை ஏற்படுத்துகின்ற, மக்களது பாதுகாப்பினை உறுதி செய்கின்ற நடவடிக்கைகளோடு, அரச மற்றும் தனியார் பொருளாதார செயற்பாடுகளைப் போன்றே, தேசிய மற்றும் சர்வதேச முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துகின்ற வகையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பினையும் அது கொண்டிருக்கின்றது. தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படாமை காரணமாக கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முகங்கொடுத்திருந்த அனுபவம் இந்நாட்டு மக்களுக்கு உண்டு.

அதேநேரம், போதைவஸ்து பாவனையிலிருந்து இந்த நாட்டை விடுவித்தல், போதைப் பொருள் இந்நாட்டுக்குள் கொண்டு வரப்படுவதைக் கட்டுப்படுத்தல், போதைவஸ்துகளுக்கு அடிமையாவதைத் தடுத்தல், போதைவஸ்துகளுக்கு அடிமையானோருக்கு புனர்வாழ்வளித்தல்,  வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு, கடலோரப் பாதுகாப்பு, தொல்பொருள் திணைக்களம் கொவிட் 19 கொரோனா தொற்றினைக் கட்டுப்படுத்தல் என மிக முக்கிய பணிக் கூறுகளை பாதுகாப்பு அமைச்சு கொண்டிருக்கின்றது.

ஜனநாயக உலகம் கட்டியெழுப்பப்பட்ட காலம் முதற்கொண்டு, அதாவது பிரான்ஸ் புரட்சியுடன் ஒரு விடயம் தோற்றம் பெற்றுள்ளது. அதாவது, ஏதாவது சுகாதாரத்துறை சார்ந்த அனர்த்தம் ஏற்படுகின்றபோது உடனே அது பொருளாதார நெருக்கடியாக மாற்றப்பட்டு, பின்னர் அது அரசியல் நெருக்கடியாக மாற்றப்படுகின்றது.

Related posts:


சம்பூரில் காணி, நிலங்களை விடுவித்தோம் என மார்தட்டிக் கொள்வதில் பயனில்லை மக்கள் மீள்குடியேற என்ன செ...
தமிழ் அரசியல் கைதிகளின் நிலைமைகளையும் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் -; செயலாளர் நாயகம் டக்ளஸ் ...
அச்சுவேலி - மூளாய் சிற்றூர்தி சேவை செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் உத்தியோகபூர்வமாக ஆரம்ப...