பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

இலங்கை முழுவதுமாக 687 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இருப்பதாக அறிகின்றேன். இந்தப் புகையிரதக் கடவைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் தங்களது தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் ஊதியப் பிரச்சினைகளை முன்வைத்து கடந்த காலத்தில் பல தடவைகள் பணிப்புறக்கணிப்புப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இவ்வாறான நிலையில், ஒரு சில புகையிரதக் கடவைகளில் விபத்துகளும் ஏற்பட்டு ஒரு சிலர் கொல்லப்பட்டதையும் நாம் அறிவோம்.
அந்த வகையில் இந்தப் பணியாளர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், அதே நேரம், நாட்டில் – குறிப்பாக வடக்கில் பல புகையிரதக் கடவைகள் பாதுகாப்பற்ற நிலையிலேயே இன்றும் காணப்படுகின்றன. இதனால் கடந்த காலங்களில் பல விபத்துக்கள் ஏற்பட்டு, பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
எனவே, இந்தப் பாதுகாப்பற்ற கடவைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்து அமைச்சு இப்போதாவது உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளதா என்பது பற்றியும், அறிய விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் செலவுத் திட்டம் தொடர்பிலான குழு நிலை விவாதத்தில் கலந்து கொண்டு, நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|