பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா? டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

பாதுகாப்பற்ற இரயில் கடவைக் காப்பாளர்களாக தற்போது பணியில் இருக்கின்றவர்களது தொழில் ரீதியலான அந்தஸ்து, நிரந்தர நியமனங்கள், ஊதியப் பிரச்சினைகள் தொடர்பில் நான் ஏற்கனவே கௌரவ போக்குவரத்து அமைச்சர் அவர்களது அவதானத்திற்குக் கொண்டு வந்திருந்தேன், அந்த வகையில் மேற்படி ஊழியர்களது பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிட்டனவா? இல்லை என்றே தெரிகின்றது. மேற்படி பணியாளர்கள் தொடர்பில் சாதகமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவது அவசியமாகும் என்பதையே மீண்டும் இங்கு வலியுறுத்த விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் –
மேலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான இரயில் போக்குவரத்துச் சேவையின் தாமதங்கள் அகற்றப்பட வேண்டும் இதற்கு ஏதுவாக முதற்கட்டமாக, பொல்கஹவெலயிலிருந்து குருனாகலை வரையிலும், இரண்டாம் கட்டமாக குருனாகலையிலிருந்து மாஹோ வரையிலும், மூன்றாம் கட்டமாக மாஹோவிலிருந்து அனுராதபுரம் வரையிலும் இரட்டை இரயில் பாதைகளை அமைப்பது தொடர்பில் அவதானங்கள் செலுத்தப்பட வேண்டும்.
மேலும், கொழும்பிற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் மேலுமொரு இரயில் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியத் தேவை உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், அதுவரையில் ஒரு ஏற்பாடாக தற்போது வவுனியா வரை செல்கின்ற ‘ரஜரட்ட ரெஜின’ இரயில் சேவையினை யாழ்ப்பாணம் வரை நீடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Related posts:
|
|