பாதசாரி கடவைகளில் இடம்பெறும் விபத்துக்களுக்கு கைத்தொலைப்பேசி பாவனையும் முக்கிய காரணமாகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!
Wednesday, February 21st, 2018குற்றங்கள் நிகழும்வரையில் மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்துவிட்டு குற்றம் நிகழ்ந்த பின்னர் ஓடிச் சென்று பிடித்து தண்டப் பணம் அறவிடுவதைவிட, குற்றங்கள் நிகழும் முன்பதாக அவற்றைத் தடுக்கக்கூடிய பணிகளிலும் போக்குவரத்து பொலிஸார் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டால், போதியளவு குற்றங்களைத் தடுக்க முடியும் என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் அவதானத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன் – என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்
மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் கீழான கட்டளை 203ஆம் அத்தியாயம் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொணடு கருத்துத தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்த அவர மேலும்; தெரிவிக்கையில் –
பாதசாரி கடவைகளில் இடம்பெறுகின்ற விபத்துகளில் 30 வீதமான விபத்துகள் கைத் தொலைப்பேசி பாவனை மூலமாக ஏற்படுவதாக இலங்கை தகவல் பொறியியல் பல்கலைக்கழகம் தகவல்களை வெளியிட்டிருக்கின்றது.
பாதசாரிகள பாதசாரி கடவைகளைக் கடக்கின்ற போது கைத் தொலைப்பேசிகளைப் பயன்படுத்துவதாலும் வாகன சாரதிகள் வாகனங்களைச் செலுத்திக் கொண்டு பாதசாரிக் கடவைகளைக் கடக்கின்ற நிலையில் கைத் தொலைப்பேசியைப் பயன்படுத்துவதனாலும் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
வேகக் கட்டுப்பாட்டினை மீறும்வாகனங்களின் சாரதிகளைப் பிடிப்பதற்காக இன்றும்கூட பல பொலிஸ் நிலையங்களில் நவீன இயந்திர சாதனங்கள் இல்லாத நிலையும் போக்குவரத்து பொலிஸாரின் பணிகள் அதிகாலை நேரங்களில் காணப்படாத நிலைமைகள் பல பகுதிகளிலும் காணப்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|