பாகுபாடற்ற தேசத்தை கட்டியெழுப்புவதே எமது நோக்கம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா !

Monday, January 7th, 2019

நாம் வர்த்தக நோக்குடனோ அன்றி சுயநல தேவைகளுக்காகவோ அரசியல் செய்வது கிடையாது. எமது மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொடுக்கவேண்டும் என்ற குறிக்கோளுடனேயே எமது அரசியல் செயற்பாடுகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மகாசபை நிர்வாகத்தினர் சந்தித்து சமகால அரசியல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

அழிவு யுத்தத்தில் சிக்கிய எமது மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு அரசியல் உரிமையுடன் கூடிய ஒரு சிறந்த நிரந்தரமான வாழ்வியலை உருவாக்க வேண்டும் என்றே நாம் செயலாற்றி வருகின்றோம்.

ஆனாலும் எமது மக்கள் இன்றுவரை உண்மையான மக்களை நேசிக்கின்ற அரசியல் தலைமையை தேர்வு செய்யும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக்கொள்ள தவறிவருகின்றார்கள். இதனாலேயே இன்றுவரை அவர்களது துன்ப துயரங்கள் தீர்வுகாணப்படாது தொடரக் காரணமாக இருக்கின்றது.

அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட எமது மக்கள் இன்று தலைநிமிர்ந்து வாழ்வதற்கான ஒரு சூழலை உருவாக்கி கொடுத்து அவர்களை பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காணச் செய்தவர்கள் நாம்தான்.

எமது மக்களின் வாக்குகளை வெவ்வேறு சுயநலக் கதைகளை கூறி போலித் தேசியம் பேசி தேர்தல் காலங்களில் உதவிகளையும் பணத்தையும்  கொடுத்து  உங்களது வாக்குகளை வாங்கும் தரப்பினரால் எப்படி மக்களது நலன்களை முன்னிறுத்தி பணியாற்ற முடியும் என்று சிந்திக்க வேண்டும்.

அந்தவகையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எமது மக்களின் அரசியல் அபிவிருத்தி உள்ளிட்ட அபிலாஷைகளை பெற்றுக்கொடுக்க ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.  அவ்வாறான முன்னெடுப்புக்களுக்கு நாம் என்றும் ஆதரவுப்பலம் கொடுக்க தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

IMG_20190106_104525

IMG_20190106_100908

Related posts:


மன்னார் மீனவர்களுக்கு நியாயமான தீர்வை பெற்றுத்தருவதற்கு அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா உறுதி!
வெற்றியை மக்கள் அள்ளித் தந்தால் மக்களுக்கு தேவையானதை அள்ளி வருவேன்: அரியாலையில் அமைச்சர் டக்ளஸ் உற...
வடக்கு கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - அமைச்சர் டக்ளஸின் முயற்சியில் இடம்பெற்ற...