பழந்தமிழர் இயக்கம் இணையத்தளத்தை டக்ளஸ் தேவானந்தா அங்குரார்பணம்!

பழந்தமிழர் இயக்கம் இணையத்தளத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.
யாழ்ப்பாணம் அரியாலையில் குறித்த இணையத்தளம் இன்றையதினம் (23) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது.
பழந்தமிழர் இயக்கம் என்ற இணையத்தளம் சமூக ஒடுக்கு முறைகளிலிருந்து பாதிக்கப்படும் மக்களுக்கு அனுகூலமான இணையத்தளமாக செயற்படவுள்ளது.
அத்துடன் தமிழர்களின் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களை வெளிக்கொணருவது மட்டுமன்றி அவற்றைப் பேணிப் பாதுகாப்பதும் இவ் இணையத்தளத்தின் நோக்கமாகும்.
கடந்தகாலங்களில் சமூக ஒடுக்குமுறைகளுக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வூட்டக்கூடியதான செய்திகளைத் தாங்கியும் இவ்விணையத்தளம் இன்றுமுதல் தனது சேவையை ஆற்றவுள்ளதாக அதன் இயக்குநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது - நாடாளுமன்றில...
வருட இறுதிக்குள் 4,200 ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு நவீன VMS கருவி பொருத்தப்படும் - அமைச்சர் டக்ளஸ் ...
|
|