பளை மாசார் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

Friday, August 5th, 2016

பளை மாசார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.

மாசார் பகுதிக்கு இன்றையதினம் (5) விஜயம் மேற்கொண்டிருந்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாசார் பிள்ளையார், பாணாவில் சித்திவிநாயகர், வாணன்பதி அம்மன் ஆகிய ஆலயங்களுக்கு சென்று ஆலய கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டதுடன் அது தொடர்பில் நிர்வாகத்தினருடன் கலந்துரையாடி கேட்டறிந்துகொண்டார்.

அத்துடன் குறித்த பகுதி மக்களது வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார மேம்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தவநாதன் மற்றும் கட்சியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் ஆகியோரும் உடனிருந்தனர்.

DSCF1587

2

03

4

9

5

6

Related posts: