பளை – காங்கேசன்துறை இடையிலான நகரப் போக்குவரத்துச் சேவை மீள ஆரம்பிக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Saturday, November 25th, 2017

வடக்கிற்கான இரயில் சேவை மீள ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் பளைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான ஒரு நகரப் போக்குவரத்துச் சேவை ஆரம்பிக்கப்பட்டு, சிறிது காலத்தில் அது நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால், இன்று அந்தச் சேவையின் தேவை எமது மக்களால் பெரிதும் உணரப்படுகின்றமையினால், அரச அலுவலர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களது வசதி கருதி மேற்படி சேவையினை மீள ஆரம்பிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவிக்கையில் –

புகையிரத நிலைய உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள் பலரும் தமிழ் மொழி மூலமான பரிச்சயம் அற்றவர்களாக இருப்பதனால் வடக்கைப் பொறுத்த வரையில் எமது பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். அதே போன்று, புகையிரதப் பாதைகள் மற்றும் கட்டிடங்களை பராமரிக்கின்ற தொழில்நுட்ப கீழ் நிலை உத்தியோகஸ்தர்கள் தென் பகுதியிலிருந்தே நியமனம் பெற்றிருக்கும் நிலையில,; மொழிப் பிரச்சினை மற்றும் தங்குமிட வசதிகள் போன்ற வற்றில் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என்றும் தெரிய வருகின்றது. எனவே, இதற்கான போதியளவு நியமனங்களை வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பது இத்தகைய சிரமங்களை தவிர்த்துக் கொள்ள ஏதுவாக இருக்கும். குறிப்பாக, வடக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற தொழிற் பயிற்சிக் கல்லூரிகளிலிருந்து கற்று வெளியேறுகின்றவர்களை புகையிரத திணைக்கள சேவைகளில் இணைத்துக் கொளள் முடியும் எனக் கருதுகின்றேன். இவ்விடயம் தொடர்பிலும் கௌரவ அமைச்சர் அவர்கள் அவதானத்தைச் செலுத்தவார் என நம்புகின்றேன்.

அத்துடன் மாவட்ட புகையிரத உதவிப் பொறியியலாளர் அலுவலகம் ஒன்றினை யாழ்ப்பாணத்தில் அமைப்பதற்கும் நடவடிக்கைத் தேவை.

மேலும், காங்கேசன்துறை – பொன்னாலை புகையிரத வீதிக்கென நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்திருந்தது. அதன் நிலை என்ன? என்றும், கடந்த காலத்தில் கொழும்பிற்கும் இரத்தினபுரி ஊடாக ஓப்பநாயக்கவிற்கும் இடையில் ஒரு புகையிரதப் பாதை இருந்ததாக ஞாபகம். அதற்கு என்ன நடந்தது? என்றும் கேட்க விரும்புகின்றேன்.

Related posts:

புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
இனங்களுக்கிடையே பரஸ்பர நம்பிக்கையினை வளர்க்க தவறியமையே நாட்டில் அசம்பாவிதங்கள் தொடர காரணம் – நாடாளும...
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்களின் நன்மை கருதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் ஐஸ் பெட்டிகள் வழங்கிவ...