பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவை சந்தித்த உழைப்பாளர் சங்கங்களின் பிரதிநிதிகள்!

Saturday, January 18th, 2020

பனை தென்னை வள கூட்டுறவு சங்கம், குருநகர் கடல்தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமது தொழில் நடவடிக்கையின் போது எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுதருமாறு கடல்தொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து கலந்துரையடினர்.

குறித்த சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

இ்தன்போது அவர்கள் மேலும் தெரிவிக்கைலியில் –
பாரம்பரியமாக தாம் மேற்கொண்டுவரும் தொழில்துறையான பனை தென்னை வளம் சார் தொழிலை முன்னெடுக்கும் தொழிலாளர்கள் இன்னோரன்ன பல்வேறுபட்ட அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனாலும்
இதற்கான தீர்வுகள் இன்னமும் முழுமையாக காணப்படாதுள்ளது.

அத்துடன் இத்துறைசார் ஊழியர்கள் இத்தொழிலை கைவிடும் நிலையும் உருவாகிவருகின்றது.
அந்த வகையில் குறித்த தொழிலை மேற்கொள்ளும் மக்களையும் அவர்களது தொழில்துறையையும் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதுடன் அதனை முன்னெடுத்துச் செல்ல உதவிகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கை விடுத்தனர்.

மேலும் இச்சந்திப்பின்போது குருநகர் கடல்தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் கடல் தொழிலின் போது பிற பிரதேசங்களின் தொழிலாளர்களால் தாம் தொடர்ந்தும் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும் இதற்கான சுமுகமான தீர்வுகளை கண்டுதருமாறும் கோரினர்.

குறித்த சங்கங்களின் பிரதிநிதிகளின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் காலக்கிரமத்தில் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து தீர்வுகளை பெற்றுத்தருவதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

எமது மக்களுக்கு அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெற வேண்டும் என்பதே எமது வலுவான நிலைப்பாடு - நெடுந்தீவில...
தரகு அரசியல் இலாபங்களுக்காகவே தமிழரசுக் கட்சியின் கூட்டமைப்பு செற்படுகின்றது - செயலாளர் நாயகம் டக்ளஸ...
எல்லைதாண்டிய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சு – அமைச்சர் டக்ளஸ் த...