பல்வேறு கோரிக்கைகளுடன் மக்கள் – தீர்வை பெற்றுக்கொடுக்கும் துரித முயற்சியில் அமைச்சர் டக்ளஸ்!
Friday, May 17th, 2024யாழ் மாவட்டத்தில் உள்ள கலாசார திணைக்களங்களில் நாளாந்த கொடுப்பனவின் அடிப்படையில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் ஊழியர்கள் தமது பணியை நிரந்தர நியமனம் செய்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரின் யாழ் அலுவலகத்திற்கு இன்றையதினம் (16.05.2024) வருகைதந்த குறித்த ஊழியர்கள் தமது தொழில் நிலைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகள் எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் அமைச்சருக்கு தெளிவுபடுத்தி கலந்துரையாடியிருந்தனர். இதன்போதே இவ்வாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில் –
குறித்த பணிகளை தாம் பல வருடங்களாக நாளாந்த கொடுப்பனவின் பிரகாரமே மேற்கொண்டு வருகின்றோம்.
இதனால் கொடுப்பனவு அதிகரிப்போ இதர கொடுப்பனவுகளோ கிடைப்பதில்லை. தற்போதைய சூழலில் வாழ்க்கை செலவுகள் மிக அதிகமாக உள்ளது. ஆனால் எமக்கான வருமானம் அதற்கு ஈடுசெய்யும் வகையில் இல்லாதுள்ளது.
இந்நிலையில் எமது பணியை நிரந்தரமாக்கி தருவதனூடாக வாழ்வாதர பொருளாதாரத்தை நிரந்தரமாக மேம்படுத்திக்கொள்ள முடியும் என நம்புகின்றோம். எனவே அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு தாருங்கள் என கோரியிருந்தனர்.
குறித்த கோரிக்கையை கவனத்தில் எடுத்த அமைச்சர் அது தொடர்பில் முயற்சிப்பதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதானிடையே யாழ், கொட்டடி சனசமூக நிலையத்திற்கு சொந்தமான காணி உறுதியை பெற்றுக் கொள்வதில் கடந்த 50 வருடங்களாக நிலவி வந்த இழுபறியை நிலைக்கு தீர்வுண்டு உறுதியைப் பெற்றுக் கொள்வதற்கு ஆவண செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நிலைய நிர்வாகத்தினரால் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவிக்கப்பட்டதுடன், தமது நிலைய செயற்பாடுகளை சீராக முன்கொண்டு செல்வதற்கு தேவையான எதிர்பார்ப்புக்கள் தொடர்பான கோரிக்கையையும் சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|