பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? – மன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? எனக் கேட்க விரும்புகின்றேன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்றையதினம் (25.11.2017) போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் மற்றும் வெளிவிவகாரம், அபிவிருத்திப் பணிப் பொறுப்பு ஆகிய மூன்று அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் –
மேற்படி விமான நிலையத்தினை ஒழுங்குறப் புனரமைத்து, அதன் ஊடாக இந்தியாவின் திருச்சி, மதுரை, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளுக்கான விமானப் போக்குவரத்து சேவையினை ஆரம்பிக்க முடியும். தற்போதைய நிலையில் இது பயனுள்ள ஏற்பாடாகும். இந்தியாவிலிருந்து சுற்றுலாப் சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் தினமும் பெருந்தொகையில் யாழ்ப்பாணத்தை நோக்கி வருகின்றனர். பிற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வருகின்ற சுற்றுலாப் பயணிகள் யாழ்ப்பாணம் வருவதற்கும் இது பயனுள்ளதாகவும், இலகுவானதுமாக அமையும்.
வட பிராந்திய போக்குவரத்துச் சபையானது ஊர்காவற்துறை நோக்கிய பாதை வழிகளில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினது கட்டண நிர்ணயத்திற்கு மேலதிகமாக எமது மக்களது பணத்தை மோசடியான முறையில் அறவீடு செய்து வருவதாக தொடர்ந்தும் முறைபாடுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்து வருகின்ற எமது தீவகப் பகுதி மக்களிடமிருந்து ஒவ்வொரு பயணிகளுக்குமாக ஒரு பயண தடவையில் 10 ரூபா முதல் 13 ரூபா வரையில் இவ்வாறு அறவிடப்படுவதாகவும், வடக்கின் ஏனைய பகுதிகளிலும் ‘பாய்ச்சல் கட்டணம்’ என்ற பெயரில் குறித்த கட்டணங்கள் அறவிடப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் முறையிட்டு வருகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் தனது அவதானத்தைச் செலுத்தி, இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.
Related posts:
|
|