பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் மாற்றத்திற்கு போது மக்களின் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா? – டக்ளஸ் எம்பி கேள்வி!

Friday, September 6th, 2019

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கில் 349 ஏக்கர் பொது மக்களின் காணிகள் 1950 – 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுவிகரிக்கப்பட்டதாகவும், 716 பேர் இக்காணிகளின் உரிமையாளர்களாக இருந்துள்ள நிலையில், அவர்களில் 215 பேருக்கு மட்டுமே இழப்பீடுகள் கிடைத்துள்ளதாகவும், மேற்படி காணி உரிமையாளர்களில் பலர் தற்போது உயிருடன் இல்லாத நிலையில், அவர்களின் உரித்தானவர்கள் உரிய உறுதிப்படுத்தல்கள் இன்மையால் குறிப்பிட்ட இழப்பீடுகளைப் பெற இயலாத நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், பலாலி விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிக்கென 1984ஆம் ஆண்டு 397 உரிமையாளர்களது 64 ஏக்கர் காணிகள்  சுவீகரிக்கப்பட்டதாகவும், இவர்களுக்கான இழப்பீடுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் அவர்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படவில்லை எனவும் அறியக் கிடைத்துள்ளது.

இதனிடையே பலாலி விமான நிலையத்திற்குக் கிழக்குப் பக்கமாக இதுவரையில் இருந்துள்;;;ள பலாலி விமான நிலைய நுழைவாயிலை தற்போது தையிட்டிப்; பக்கமாக – அதாவது மேற்குப் பக்கமாக மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால், தமது சொந்தக் காணிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரையும் தாங்கள் இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றே எமது மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், மேற்படி விடயம் தொடர்பில் பின்வரும் கேள்விகள் எழுகின்றன.

1950 – 1960 ஆண்டுகாலப் பகுதியில் சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களில் இழப்பீடுகள் வழங்கப்படாத 501 உரிமையாளர்களது உரித்தாளர்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்கு அதற்குரிய உறுதிபடுத்தல்கள் இல்லாத நிலையில் இருக்கின்றமையால், இவர்கள் அந்த இழப்பீடுகளைப் பெற ஏதேனும் மாற்று ஏற்பாடுகள் மேற்கொண்டு உதவ முடியுமா?

1984ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட 64 ஏக்கர் காணிகளின் உரிமையாளர்களான 397 பேருக்கு அதற்கான இழப்பீடுகள் எப்போது வழங்கப்படும்?

பலாலி விமான நிலையத்தின் நுழைவாயில் தையிட்டிப் பக்கமாக மாற்றி அமைக்கப்படவுள்ளதா? அவ்வாறு மாற்றி அமைக்கப்படும் எனில், பொது மக்களின் சொந்தக் காணிகள் மேலும் சுவீகரிக்கப்படுமா?

மேற்படி எனது கேள்விகளுக்கான பதில்களையும், எடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலான விளக்கங்களையும் கௌரவ அமைச்சர் அர்ஜூன ரணதுங்க அவர்கள் வழங்குவார் என எதிர்பார்க்கின்றேன்.

நாடாளுமன்றில் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ அர்ஜூன ரணதுங்க அவர்களிடம் கேட்கப்படது…)

Related posts:


போதைப் பொருள் கடத்தல்களை முறியடித்த பொலிஸாருக்கு இடமாற்றம் ஏன்?  - டக்ளஸ் தேவானந்தா சந்தேகம்!
சமுர்த்தியின் பெயர் மாற்றப்பட்டால் தமிழில் அதனை 'மக்கள் செல்வம்' என்று  அழைக்கப்பட வேண்டும் - நாடாளு...
தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கு மகஜன எக்சத் பெரமுன முழுமையான பங்களிப்பை வழங்கும் என நம்புகி...