பலாலி – தமிழக விமான சேயையை மீண்டும் ஆரம்பிக்க ஏற்பாடு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணிச் சபை நன்றி தெரிவிப்பு!

Monday, June 20th, 2022

தேவாரப் புகழ் பெற்ற மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேக நிகழ்வில் தென்னிந்தியாவில் இருந்து அடியவர்கள் கலந்து கொள்ளும் வகையில் பலாலி –  திருச்சி மற்றும் சென்னை போன்ற விமான நிலையங்களுக்கு இடையிலான விமானப் போக்குவரத்தினை மீண்டும் ஆரம்பிதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டமைக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நன்றி தெரிவித்துள்ள ஆலய திருப்பணிச் சபையினர், கும்பாபிஷேக நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறும் கடற்றொழில் அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மேலும், ஜீலை 6 ஆம் திகதி நடைபெறவுள்ள கும்பாபிஷேகத்திற்கான கிரியைகள், இம்மாதம் 30 ஆம் திகதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளமையினால், குறித்த கிரயைகளில் பங்குபற்றுவதற்காக வருகைதரவுள்ள சிவாச்சாரியர்கள், மற்றும் அடியவர்களின் நலன் கருதி, ஜீன் 28 ஆம் திகதி தொடக்கம் பலாலி விமான சேவையை ஆரம்பிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்பினருடன் ஆராயுமாறும் திருக்கேதீஸ்வர ஆலயத் திருப்பணிச்

சபையின் தலைவர் திரு. செ. இராகவன், இணைச் செயலாளர் திருமதி அ. கையிலாசபிள்ளை மற்றும் பொருளாளர் திரு வே. கந்தசாமி ஆகியோர் , மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை நேரடியாகச் சந்தித்து கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: