பருத்தித்துறை, குருநகர், பேசாலை பகுதிகளில் விரைவில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

Friday, November 27th, 2020

பேலியகொட மத்திய மீன் விற்பனைச் சந்தையை சுகாதார விதிமுறைகளின் பிரகாரம் வெகு விரைவில் மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன அந்த வகையில் சில அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கான ஆய்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மேற்படி மீன் விற்பனைச் சந்தையின் வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோருக்கான சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் இந்த விற்பனைச் சந்தையை திறப்பதற்கு எண்ணியுள்ளோம் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதே வேளை இந்த சந்தையின் எதிர்காலத்தில் ஏற்பட இருக்கின்ற சனநெருக்கடியை குறைப்பதற்கு நாட்டின் ஏனைய ஐந்து பகுதிகளிலும் மேலதிக சந்தைகளை அமைக்க இருக்கின்றோம்.

மேலும், கரையை அண்டிய கடற்பகுதிகளில் மீனின உற்பத்தியை அதிகரிப்பதற்கான விஞ்ஞான ரீதியிலான பொறிமுறையொன்றினை அறிமுகஞ் செய்தல்,  கந்தர, வெல்லமன்கர, பலப்பிட்டிய, ஹிக்கடுவ, அம்பலங்கொட, காலி, மிரிஸ்ஸ, நிலாவெளி, அம்பாந்தோட்டை, சுதுவெல்ல, தொடந்தூவ, மயிலிட்டி, வாழைச்சேனை போன்ற மீன்பிடித் துறைமுகங்களை புதிதாக அமைத்தல் நவீனமயப்படுத்தல் மற்றும் விஸ்தரித்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றோம். அத்துடன் பருத்தித்துறை, குருநகர், பேசாலை மீன்பிடித் துறைமுகங்களை அமைத்தல், ஒலுவில் துறைமுகத்தை மீன்பிடித் துறைமுகமாக மாற்றியமைத்தல் மற்றும் தேவையின் அடிப்படையில் புதிய மீன்பிடித் துறைமுகங்களை அமைத்தல், சர்வதேச கடற்பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வகையில் தேசிய நிறுவனங்களுக்கு சந்தர்ப்பங்களை வழங்குதல் மற்றும் ஊக்குவித்தல், ரின் மீன் கைத்தொழிலை மேம்படுத்துவதற்கென தனியார்த்துறை நிறுவனங்களையும், முதலீட்டாளர்களையும் ஊக்குவித்தல், உற்பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் நியாயம் கிட்டுகின்ற வகையில், கடலுணவு உற்பத்திகளுக்கான விற்பனை அபிவிருத்தி நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், கடற்றொழிலாளர்களுக்கென பயனுள்ள வங்கி மற்றும் காப்புறுதி முறைமையொன்றை அறிமுகஞ் செய்தல், கடல்சார் பல்கலைக்கழகத்தைப் பயன்படுத்தி இளைஞர், யுவதிகளுக்கென கடற்றொழில் தொடர்பிலான தொழிந்நுட்ப மற்றும் முகாமைத்துவப் பயிற்சி நெறிகளை செயற்படுத்தல், கடற்றொழிலாளர்களின் நலன்புரி நடவடிக்கைகளை விரிவுபடுத்தல் போன்ற விஷேட முதன்மைப் பணிகள் நம்முன் இருக்கின்றன

Related posts: