பயிற்சிக்காக விறகுக் கட்டையை கூட தூக்காதவர்கள் மாணவர்களை பலிகொடுத்தே வீரம் பேசுகின்றனர். – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, August 7th, 2019

உண்மைகளைக் கூறுகின்றபோது, அதை ஜீரணித்துக் கொள்ள முடியாத கொள்கையில்லாத, வெறும் கொள்ளைகளையே அரசியல் மூலதனமாகக் கொண்டவர்கள் பித்து பிடித்தவர்களாக பிதற்றித் திரிவதுண்டு. அந்த வகையிலே கடந்த வாரம் நான் நாடாளுமன்றத்திலே உரையாற்றியிருந்தபோது, வெலிக்கடை படுகொலைகள் தொடர்பில் நியாயம் கோரியிருந்தேன்.

ஒரு போராளியாக இருந்த நிலையில் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலைகள் நடந்தேறிய சந்தர்ப்பத்தில் நானும் ஓர் அரசியல் கைதியாக அதே சிறையில் இருந்ததால், அந்தப் படுகொலைகள் தொடர்பில் என்னால் கண் கண்ட சாட்சியாக சாட்சி கூற முடியும் என்பதையே நான் சுட்டிக்காட்டி இருந்தேன்.

எமது மக்களின் விடுதலைக்காகப் போராடியிராத, புலிகள் விறகுக் கட்டையால் பயிற்சி கொடுப்பதற்கு அழைத்தபோதுகூட, அதற்குப் பயந்து, பாடசாலைப் பிள்ளைகளை தனக்குப் பதிலாக பயிற்சிக்கு அனுப்பி, அப்பிள்ளைகளை காவு கொடுத்தவர்கள் இந்தச் சபையிலே எனது கருத்துகளை ஜீரணிக்க முடியாமல், வெறும் வாயால் போராளிகளாக ஆக முற்படுகின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நடைபெற்ற மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் பற்றிய அவதானிப்புகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேணைத் தொடர்பிலான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்  –

நான் சம்பந்தப்பட்ட எந்தவொரு விடயம் தொடர்பிலும் நேரடியாக சாட்சி சொல்வதற்கு நான் தயாராகவே இரக்கின்றேன். ஆனால், எனக்கு சம்பந்தமில்லாத, சம்பந்தப்படாத விடயங்கள் தொடர்பில் என்னால் சாட்சி சொல்ல முடியாது. ஒவ்வொருவருடைய கொள்கையில்லாத அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு என்னால் சாட்சி கூற முடியாது.

இதுவரையில் அமைக்கப்பட்டிருந்த ஆணைக்குழுக்களிடையே, கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடமிருந்தே சாட்சி கூற வருமாறு எனக்கு அழைப்பு கிடைத்திருந்தது. அதிலே நான் சாட்சி கூறியிருந்தாலும், என்னிடம் கேட்கப்படாத கேள்விகளை கேட்டதாகவும், அவற்றுக்கு நான் கூறாத பதில்களைக் கூறியதாகவும் பின்னர் அறிக்கையிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் பின்னர் நான் நாடாளுமன்றத்திலே கேள்வி எழுப்பி, அத்தகைய தவறுகளை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளேன். அது இங்கே ஹென்சார்ட்டிலும் பதிவுபெற்றுள்ளது.

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக என்மீது சமபந்தமில்லாத விடயங்களை எல்லாம் பொய்யாக சோடித்து, அவற்றுக்கெல்லாம் சாட்சி கூற வேண்டும் என கூறுகின்றவர்களைப் போல், பொய்யாக சோடித்து என்னால் கருத்தோ, சாட்சியோ கூற முடியாது.

கொலைகளுக்கு ஊடாக எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் நாம் ஒருபோதும் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. செம்மணி ஆகட்டும், மண்டைத்தீவாகட்டும் பல்வேறு கொலைகள், காணாமற் போகச் செய்தமை என்பன எமது மண்ணில் கடந்த காலங்களில் ஏற்பட்டிருக்கின்றன. அவை தொடர்பில் விசாரணைக்கு அழைக்கப்பட்டால், எனக்குத்; தெரிந்ததை கூற நான் எப்போதும் தயாராகவே இருக்கின்றேன். அதில் யாரும் எவ்விதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை.

இவற்றுக்கு எல்லாம் நான் சாட்சி கூற வேண்டும் எனக் கூறுபவர்கள், முதலில் இத்தகைய சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அதனை செய்யாது வெறும் மண்டைத்தீவு கிணற்று தவளைப்போல்  கத்திக் கொண்டு இருப்பதில் எவருக்கும் எந்தப் பயனும் இல்லை என்பதை இந்தச் சந்தர்ப்பத்திலே கூறி வைக்க விரும்புகின்றேன்.

ஏற்கனவே இந்த சபையில் மண்டைத்தீவு கிணறுகளில் பலர் கொல்லப்பட்டு போடப்பட்;டு, மூடப்பட்டுள்ளதாக இந்த வெற்று வாய்ப் போராளி கூறியபோது, அமைச்சர் மனோ கணேசன் அவர்கள் அந்தத் தகவல்களை எழுத்து மூலமாகக் கோரியிருந்தார்.  இவரும் அதைத் தருவதாக தெரிவித்திருந்தார். அதற்கு இதுவரையில் என்ன நடந்தது? என்பது தெரியாது. உண்மையில் தம்மிடம் ஆதாரம் இருந்தால், அதைக் கொடுத்து விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும். அதைவிடுத்து, வெறுமனே ஊடகங்களுகக்காகக் கத்திக் கொண்டிருப்பதால் பயனில்லை.

அதேநேரம், எமது மக்களின் துன்ப, துயரங்களைக் காட்டி புலம்பெயர் எமது உறவுகளிடம் இருந்து ஏராளமான பண உதவிகள் பெற்று அவற்றை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்ற இத்தகைய வாய்ப் போராளிகள் தொடர்பில் உடனடி விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதையும் இங்கு வலியுறுத்தி, இன்றைய விடயத்திற்கு வருகின்றேன்.

Related posts:

மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானாவின் நாமத்தை கொழும்பில் ஒரு வீதிக்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்...
படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை - ஊடகவியலாளர் சந்த...
'நமது வீட்டுத் தோட்டத்தில் ஆரம்பிப்போம்!' தேசிய செயற்றிட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கிளிநொச...

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் - நாடாளும...
தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  - நாடாளுமன...
முகமாலையில் சுமார் 316 ஏக்கர் காணிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஆ...