பயணிகள் முறையீடு – யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்!

Friday, May 31st, 2024


யாழ் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உரிய அனுமதியின்றி நிர்மாணிக்கப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களால் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியங்களை அகற்றி தருமாறு பொதுமக்களினால் முன்வைக்கப்பட்ட  முறைப்பாடுகளை அடுத்து இன்று மாலை திடீர் விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நிலமைகளை நேரில் பார்வையிட்டார்.

இதன்போது அங்கு காணப்படும் அசுத்தமான சூழலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவுறுத்தியதுடன்,   இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய பணிப்பாளருடனும் தொடர்பு கொண்டு நிலமைகள் தொடர்பாக பிரஸ்தாபித்தார்.
000

Related posts: