பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையோடுசெயற்படுங்கள் – வடக்கு, கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.

Monday, September 11th, 2017

வடக்கு, வடக்கில் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் தூரப் பேருந்து உரிமையாளர்களும், பயணிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி உரியதீர்வுகளைப் பெற்றுத் தருவேன் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாஅவர்கள் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஈ.பி.டி.பிக்கட்சியின் காரியாலயத்தில் நேற்றையதினம் (10.09.2017) நடைபெற்ற செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், வடக்குகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்ததனியார் தூரப் பேருந்துஉரிமையாளர்களுக்கும், கொழும்பிலிருந்துவடக்கு, கிழக்குமாகாணங்களுக்குகொழும்பிலிருந்துதனியார் பேருந்துச் சேவைகளைநடத்தும் உரிமையாளர்களுக்கும் இடையேயானசந்திப்பில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்தக் கலந்துரையாலின் போது தொடர்ந்து உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள், பேருந்து சேவைகளில் ஈடுபடுபவர்கள் வழித்தடத்துக்கான முறையான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வது, வாகனங்களின் தரத்தைமுறையாகப் பராமறிப்பதுமற்றும் பயணிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிப்பதுபோன்றவற்றில் மிகுந்த அக்கறையோடு சேவையாற்ற வேண்டும்.

அதேபோல் பயணிகளை உணவுக்காகநிறுத்தும் சிற்றூண்டிச் சாலைகளின் தரம்,அவற்றின் சுகாதாரமேன்மைஎன்பவற்றைகவனத்தில் கொண்டுநிறுத்தங்களைச் செய்வது,பயணிகளின் பொதிகளைபாதுகாப்பாககையாள்வதுபோன்றகாரியங்களையும் பேருந்து உரிமையாளர்களும், நடத்துனர்களும்  சமூகஅக்கறையோடுசெய்யவேண்டும் என்றுதெரிவித்தார்.

செயலாளர் நாயகத்தின் கருத்துக்களைஏற்றுக்கொண்டதுடன்,யாழ். கொழும்புசேவையில் ஈடுபடும் தமது பஸ் வண்டிகள் தொடர்ந்தும் வெள்ளவத்தையிலிருந்துகொள்ளுப்பிட்டிவரைகாலிவீதியைப் பயன்படுத்திபயணிகளை ஏற்றுவதற்கு அனுமதிபெற்றுத் தந்ததற்காகதாம் அனைவரும் செயலாளர் நாயகத்திற்கு முதலில் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டதுடன், தமது கோரிக்கையையும் முன்வைத்தனர்.தாம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவருவதாகவும், தமது பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக்காண்பதற்கும், தமக்கிடையேயான ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கும் தம்மை உறுப்பினர்களாகக் கொண்டமையும் சங்கம் ஒன்றை உருவாக்கவேண்டுமென கோரிக்கையைவிடுத்தனர்.

அதற்கமைவா கபலரின் கருத்தக்களும் ஆராயப்படடதன் பின்னர்“வடக்கு,கிழக்குமற்றும் கொழும் புதனியார் தூரப் பேருந்துஉரிமையாளர்கள் சங்கம்”எனும்பெயரில் சங்கம் அமைப்பதென்றும், அதற்குத் தேவையானசட்டஅங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்வதென்றும்,அதற்குசெயலாளர் நாயகம் ஆலோசகராக இருப்பதைதாம் விரும்புவதாகவும் ஏகமனதாககோரிக்கைவிடுத்தனர்.அவர்களின் கோரிக்கைகளுக்குதேவையானமேலதிகநடவடிக்கைகளைஎடுப்பதற்குமுடிவுசெய்யப்பட்டது.

Related posts:

அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடுகள் இன்றி அதிகரிப்பது வருந்தத் தக்கது - டக்ளஸ் தேவானந்தா ...
யாழ். மாட்டின் குருமடத்தை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம...
வன்னி மக்களின் இடர் துடைப்பேன் என்ற நம்பிக்கை இருபது வருடங்களுக்கு முன்னரே எனக்கு இருந்தது – அமைச்சர...