பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்தி சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
Wednesday, August 31st, 2022கிளிநொச்சி மாவட்ட பனை தென்னை வள கூட்டுறவு அபிவிருத்திச் சங்கத்தினால் மேற்கொள்ளக்கூடிய, வேலைத் திட்டங்கள் தொடர்பாக குறித்த சங்க நிர்வாகிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டனர்.
குறித்த நிறுவனம் மதுவரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையினை செலுத்துவதில் இருந்து விலக்களிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில், வரி விலக்கு செய்யப்படும் தொகையினை பயன்படுத்தி, மேற்கொள்ளக்கூடிய குறித்த சங்கத்தினை சார்ந்த மக்களுக்கான அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக இதன்போது ஆராயப்பட்டது. – 31.08.2022
Related posts:
அடையாள அட்டை வழங்கும் வேலைத் திட்டத்தை இலகுபடுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா அவையி...
50 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக 15ஆயிரம் வீடுகளைக் கட்டும்பணிகள் மார்கழி மாதம் முதல்வ...
அத்துமீறும் கடற்றொழில் நடவடிக்கைகளை ஏற்க முடியாது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
|
|
மாகாணசபையில் எதுவும் இல்லை என்றவர் மீண்டும் முதல்வர் பதவிக்கு முண்டியடிப்பது ஏன்? - யாழில் ஊடகவியலாள...
நாம் அதிகாரத்தை கைப்பற்ற நினைப்பது மக்கள் சுதந்தரமாக வாழ்வதற்கே அன்றி நாம் சுகபோகங்களை அனுபவிப்பதற்க...
'சுகந் இன்ரனாசினல்' நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் திறந்து...