பனைசார் உற்பத்தி பொருட்களை நவீனமயப்படுத்த முழுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – பனை அபிவிருத்தி சபையினருடனான  கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, November 4th, 2018

பனைசார் உத்பத்தி  பொருட்களை உலகத் தரம் வாய்ந்ததாக மாற்றியமைக்க முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தாம் தயாராக இருப்பதுடன் அதற்கான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுக்க தயாராகுமாறு பனை அபிவிருத்தி சபை உறுப்பினர்களுடனான சந்திப்பின்போது புனர்வாழ்வு, மீள்குடியேற்றம், வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

அமைச்சின் அலுவலகத்தில் இன்று துறைசார் அதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பனைசார் தொழிலில் ஈடுபடும் மக்கள் அதிகம் வாழ்கின்றனர். இவர்களது வாழ்வாதாரத்துக்கான பொருளாதாரத்தை இத்துறை வழங்கிவருகின்றது. அந்தவகையில் இத்துறைசார் மக்கள் பனை சார் உற்பத்திகளாக பல்வேறுபட்ட உற்பத்திகளையும் கைவினை பொருட்களையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அனாலும் அவர்களுக்கான முழுமையான சந்தை வாய்ப்பும் அத்துறையை நவீன மயப்படுத்தி மேம்படுத்தவதற்கான நவீன வசதிகளும் இன்றி பல அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

தற்போது எமக்கு மீண்டும் குறித்த துறைசார் மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அந்தவகையில் இத்துறைசார் உற்பத்தி பொருட்களை சர்வதேச தரம் வாய்ந்ததாக உற்பத்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுடன் அதற்கான அனைத்து முயற்சிகளையும் துரிதகதியில் முன்னெடுக்க அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் பனை அபிவிருத்தி சபை அதிகாரிகளுக்கு  அமைச்சர்  வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: