பனங் கள் உற்பத்தியானது 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 23rd, 2017

சிலாபம் மற்றும் நாத்தாண்டிய பகுதிகளிலேயே மேற்படி கள் உற்பத்தி நடவடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்ற நிலையில், இந்தப் பகுதிகளில் பொலிஸார் மேற்கொள்கின்ற சுற்றி வளைப்புகளின்போது, இந்த உற்பத்திக்கென யூரியா, அமோனியா, ஈஸ்ட், உடல் நலத்திற்குத் தீங்கான அல்லது வலி நிவாரண மருந்து குழிசைகள், இந்தியாவிலிருந்து தருவிக்கப்படுகின்ற ஒரு வகையான மருந்து குழிசைகள் என்பன பயன்படுத்தப்பட்டு வருவதையும், அவை கைப்பற்றப்படுவதையும் ஊடகச் செய்திகளின் மூலமாக சுட்டிக்காட்டப்படுகின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மதுவரிக் கட்டளைச் சட்டத்தின் அறிவித்தல் தொடர்பாக கடந்த 22ஆந் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வகையில் பார்க்கின்றபோது, வடக்கில் இயற்கையாகவே பனங் கள்ளினை போத்தலில் அடைப்பதற்கான வருடாந்த உரிமக் கட்டணமும், மேற்படி தீங்கு தரக் கூடிய செயற்கையான கள்ளினை போத்தலில் அடைப்பதற்கான வருடாந்த உரிமக் கட்டணமும் 10 இலட்சம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேற்படி செயற்கை கள் உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட சாராரின் வியாபாரமாக இருந்து வரும் நிலையில், இயற்கையான பனங் கள் உற்பத்தி என்பது வடக்கே சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நேரடி மற்றும் மறைமுக வாழ்வாதாரத் தொழிலாக இருந்து வருகின்றது.

எனவே, போதையற்ற நாடு என்ற வகையிலே எமது நாட்டை முன்னெடுத்துச் செல்லும்போது, போதை பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ள மக்களை அதிலிருந்து படிப்படியாக விடுவிக்கும் பொருட்டு, முதலில் வன் மதுபானங்களிலிருந்து மென் மதுபானங்கள் நோக்கி அவர்களைக் கொண்டு வர வேண்டும். இந்த அணுகுமுறையானது மேற்கு ஐரோப்பா, அவுஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் வெற்றியளித்துள்ளன. அதாவது, மென் ரக மதுபான வகைகளின் உற்பத்திக்கு வரிச்சலுகைகள் வழங்கி, ஊக்குவித்துள்ளதன் ஊடாக வன் மதுபான வகைகளின் பாவனையிலிருந்து மென் மதுபான வகைகளின் பாவனைக்கு மக்களின் குடிப்பழக்கத்தை மாற்றுவதில் அந்த நாடுகள் வெற்றி கண்டுள்ளன. இதனூடாக, அம் மக்களைப் படிப்படியாக மதுப் பாவனையிலிருந்து விடுவிக்க முடியும்.

Related posts:

நாட்டில் நவீன கல்வித்துறையோடு கூடிய கல்வி முறை வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து...
வன்முறை எந்தவடிவத்தில் எந்தப் பக்கமிருந்து தோற்றம்பெற்றாலும் அதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும் - நா...
யாழ்ப்பாணத்தில் படகு கட்டும் தொழிற்சாலையை அமைதற்கு தனியார் முதலீட்டாளர்கள் கோரிக்கை - ஒத்துழைப்பு வ...