பதற்றம் தேவையில்லை : ஆனாலும் விழிப்புடன் இருங்கள் – கொரோனா தடுப்பு விசேட ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 22nd, 2020

மனித உயிர்களைக் காவுகொள்ளும் கொரோனா என்ற வைரஸின் தாக்கம் யாழ்ப்பாணத்தில் இன்றைய நிலையில் ஆபத்துக்கட்டத்தை நெருங்காத போதிலும் அந்த நோய் பரவல் குடாநாட்டில் பரவாது தடுப்பதற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளிலும் நாம் தயாராக இருப்பது அவசியம் என்றும் அதற்கான அனைத்து விதமான தேவைப்பாடுகளுக்கும் முழுமையான ஒத்துழைப்புக்களை தர தாம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இது குறித்து மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும் ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தாக்கம் யாழ்ப்பாணக் குடா நாட்டையும் அச்சுறுத்தத் தொடங்கியுள்ள நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விசேட உயர்மட்டக் கூட்டம் ஒன்றை யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருடன் விரிவாக ஆராய்ந்தறிந்துகொண்டார்.

மாவட்டத்தின் நிர்வாக மற்றும் சுகாதார உயரதிகாரிகள் படைத்தரப்பின் உயரதிகாரிகள் பொலிசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்ட குறித்த உயர்மட்ட ஆராய்வு கூட்டத்தில் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்துகொண்டபின் கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்நோயை கட்டுப்படுத்த இலங்கை தீவு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை துறைசார் தரப்பினருடன் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் தற்போது யாழ்ப்பாணத்தில் இந்நோய் பரவ வாய்ப்புள்ளதாக தற்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ள நிலையில் இந்த நோயை எதிர்கொண்டு எமது மக்களை பாதுகாக்க நாம் அனைவரும் ஒருமித்து முயற்சிகளை மேற்கொள்வது அவசியம். இதன்போது ஏதாவது தடைகள் மற்றும் இதர அசௌகரியங்கள் வருமாயின் சேவையை முன்னெடுக்கும் உங்களுக்கு ஒத்துழைப்புக்களை துறைசார் தரப்பினருக்கு தர நாம் தயாராக இருக்கின்றோம்.

தற்போது நாட்டில் ஒர் அவசர நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நாடுமுழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு மக்கள் செறிந்து செயற்பாடுகளை முன்னெடுப்பதை தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதனால் நேய் பரவலை தடுக்க முடியும் என சுகாதார துறையினர் கூறுகின்றனர். வடக்கின் குறிப்பாக யாழ் மாவட்ட நிலைமை தொடர்பில் பல தரப்பினரும் பல்வேறு கருத்துக்களையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளீர்கள். குறிப்பாக கொரோனா தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தில் யாழ் பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 9 நோயாளிகளில் பலர் குணமாகி வருவதாக யாழ் வைத்திய துறைசார் தரப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு நற்செய்தியாகவே உள்ளது.

அத்துடன் அரியாலை பிலதெனியா தேவாலயத்தில் கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற மதப் பிராத்தனை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் அனைவரையும் கண்காணிப்பது முக்கியமானதாகும். இது தொடர்பிலும் ஆராயப்பட்டு  அவர்கள் அனைவரும் இனங்காணப்பட்டு பரிகாரங்கள் கொடுக்க வேண்டும்.

அத்துடன் நாளை(23) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படவுடன் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்ய பெருமளவில் மக்கள் கடைகளில் கூடுவதற்கான சந்தர்ப்பம் அதிகம் காணப்படுகின்றது.

இந்நிலையில் மக்களை குறித்த உயிர்கொல்லி தொற்றிலிருந்து பாதுகாப்பது, உணவுப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பிலும் துறைசார் தரப்பினர் சுட்டிக்காட்டியிருந்தனர்.

மேலும் அவசர தேவைகளுக்காக அதிகரிக்க்கப்படவேண்டிய அம்புலன்ஸ் சேவை, வடக்கின் அனைத்து மாவட்டங்களிற்கும் விரிவுபடுத்தப்படுவது மற்றும் அவசர கொரோனா தடுப்பு மையங்கள் அதற்கான ஆளணி மற்றும் இதர தேவைப்பாடுகளின் பற்றாக்கறை தொடர்பிலும் துறைசார் தரப்பினர் கூறிய கருத்துக்கள் ஊடாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது. எனவே  இவை அனைத்தையும் துறைசார் தரப்பினருடன் ஆராய்ந்து அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கைகளை மேற்கொள்கின்றேன்.

அத்துடன் இந்நிலை தொடர்ந்தும் ஏற்பட்டுள்ளதால் நாளாந்தம் உழைத்து வாழும் குடுப்பங்களுக்கான நிவாரணங்களை வழங்குவது அதை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் சமுர்த்தி உள்ளிட்ட தரப்பினரால் முன்னெடுக்க வேண்டிய பொறிமுறைகள்  தொடர்பிலும் குறித்த தரப்பினருக்கு அறிவுறுத்தல் கொடுத்திருந்தேன். அதுமட்டுமல்லாது யாசகர்களுக்கான பாதுகாப்பு மற்றும் அவர்களது உணவுலுத் தேவைகளை திர்ப்பதற்கும் வழிவகைகள் ஆராயப்பட்டன என தெரிவித அமைச்சர் இந்நோய்  தொற்றுக் குறித்து மக்கள் பதற்றப்பட தேவையில்லை என்றும் ஆனாலும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் வலிறுதியிருந்தார்.

Related posts: