பண்ணையாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா எம்.பி தெரிவிப்பு!

வடமராட்சி வடக்கில் கால்நடை உற்பத்தியை மேம்படுத்தி அதனூடாக பண்ணையாளர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு எதிர்காலத்தில் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வடமராட்சி வடக்கு புலோலி, காந்தியூர், சனசமூக நிலைய முன்றலில் இன்றையதினம் அப்பகுதி மக்களை சந்தித்து கலந்துரையாடடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
பருத்தித்துறை கால்நடை அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் அதன் தலைவர் ஜெயதேவன் தலைமையில் அப்பகுதி பண்ணையாளர்கள் செயலாளர் நாயகத்தை சந்தித்து கால்நடை வளர்ப்பில் தாம் எதிர்கொள்ளும் இடர்பாடுகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக தெளிவுபடுத்தியதுடன் பல கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.
அதனடிப்படையில் கால்நடைகள் ஊடாக அதிகளவு வருமானத்தை பெறும் நோக்கில் நல்லின கால்நடை வளர்ப்பு மற்றும் அவற்றின் பராமரிப்பு உள்ளிட்ட விடயங்களை சுட்டிக்காட்டிய பண்ணையாளர்கள் பாலுற்பத்தியை அதிகரித்து அதனூடாக அதிகளவு வருமானத்தை பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். குறித்த விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்திய அவர் எதிர்காலத்தில் பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அரசு புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்குமானால் மாற்றுப் பயர் நடவடிக்கை தொடர்பில் சரியான செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமானது. என்பது தொடர்பில் மக்கள் டக்ளஸ் செயலாளர் நாயகம் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
புகையிலைச் செய்கைளை தமது முக்கிய விவசாய பயிராக மேற்கொண்டுவரும் மக்கள் புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்கப்படுமானால் தாம் பல்வேறுப்பட்ட நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்றும் தெரிவித்தனர்.
அந்த வகையில் புகையிலைக்கு மாற்றிடாக மாற்றுப் பயிர்ச்செய்கையொன்றை அறிமுகப்படுத்தி அதனூடாக தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் துறை சார்ந்தவர்களுடன் கலந்துரையாடி உரிய தீர்வுகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.
Related posts:
|
|