படையினரை முழுமையாக வெளியேற்றக் கோரியவர்கள் நீண்டால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை – ஊடகவியலாளர் சந்திப்பில் டக்ளஸ் எம்.பி.சுட்டிக்காட்டு!

Friday, May 3rd, 2019

படையினரை முழுமையாக வேளியேற்றுவோம் என கோசமிட்டு தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்தவர்கள் நீண்டகால நோக்கில் சிந்தித்திருக்கவில்லை, அவ்வாறு அவர்கள் சிந்தித்திருந்தால் படையினரை இன்று வெளியேற்ற வேண்டாம், அவர்கள் நிலைத்திருக்க வேண்டும் என்று கூறியிருக்க மாட்டார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாங்கள் தமிழ் மக்களின் சனத்தொகை விகிதாசாரத்திற்கு ஏற்ற வகையில் மட்டுமே எமது பிரதேசங்களில் படையினர் நிலை கொள்ளல் அவசியம் என்று வலியுறுத்தியிருந்தோம்.

ஏனெனில் இயற்கை அனர்த்தங்கள் நடந்தால் தமிழ் மக்களைக் பாதுகாப்பதற்கு எமக்கு ஒரு கட்டமைப்பு தேவை.  ஆனாலும் அது எம்மிடம் இல்லை. அதை அதிகாரத்தில் இருந்த வடக்கு மாகாண சபையே உருவாக்கி இருக்க வேண்டும். ஆனால் அதை அவர்கள் செய்திருக்கவில்லை.   

ஆனாலும் நான் அமைச்சராக இருந்த போது  அவ்வாறான ஒரு மக்கள் நலப்பணி தொண்டர் கட்டமைப்பை உருவாக்கியிருந்தேன். மாகாணசபை அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் அதை நிரந்தரமாக்கியிருப்போம்.

அந்தவகையில் எமது மக்களுக்கு தொண்டாற்ற வேறு எவரும் இல்லை என்ற வெற்றிடத்தில்தான் படையினர் எமது மக்களுக்கு சேவையாற்ற வேண்டிய கட்டாயம் நிகழ்கிறது என்றும் அவர் மேலும்  தெரிவித்தார்.

Related posts:

அதிபர் சேவை தரம் 3 : நேர்முகத் தேர்வுக்கு தோற்றியும் நியமனம் வழங்கப்படாது பாதிக்கப்பட்டோருக்கு விரைவ...
செயலார் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்டத்திற்கான விசேட...
அரசியல் கைதிகளின் விடுதலை நல்லெண்ணச் செய்தியாக அமைய வேண்டும். - அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்...
பலநாள் படகுகளுக்கு தேவையான உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ்!
அமைச்சர் டக்ளஸை சந்தித்த கூட்டமைப்பின் MP செல்வம் அடைக்கலநாதன் – மன்னார் கடற்றொழிலாளர் தொடர்பில் கலந...