அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி – நெடுந்தீவு மக்கள் மகிழ்சி!

Saturday, April 25th, 2020

நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியிலிருந்து பெருமளவு இறால் அறுவடையில் மக்கள் ஈடுபட்டுள்ளனர் வறுமையில் சிக்கியிருந்த தமக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்ட முயற்சி பேருதவியாக இருப்பதாக நெடுந்தீவு மக்கள் மகிழ்சி தெரிவித்துள்ளனர்.

இறால் வளர்ப்புக்கு உகந்த வடக்கின் வளமான அனைத்து இடங்களிலும் இறால் குஞ்சுகளை வளரச்செய்வதன் ஊடாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தமது பொருளாதாரத் உயர்த்திக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்த முடியுமென்ற தூரநோக்கு கருத்திட்டத்திற்கு அமைவாக கடற்றொழில் மற்றும் நீரகவள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் வடக்கிலுள்ள நிலையான நீர் நிலைகள், பருவகால ஏறிகள் அடையாளம் காணப்பட்டு பல இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டன.

அவ்வாறு நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியில் விடப்பட்ட லட்சக்கணக்கான இறால் குஞ்சுகள் தற்போது வளர்ந்துள்ளதால் அங்கு மக்கள் இறால் அறுவடையை ஆரம்பித்துள்ளார்கள்.

நெடுந்தீவு வெட்டுக்களி ஏறியில் மட்டும் சுமார் 1500 கிலோ இறால் மக்களால் அறுவடை செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய கொராணா அச்சமும் தொடர்ச்சியான ஊரடங்கும் காரணமாக வறுமையில் பட்டினியை எதிர்கொண்டிருந்த மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தீர்க்க தரிசனமான நெடுந்தீவில் இறால் வளர்ப்பு நடவடிக்கையானது பேருதவியாகவும், வாழ்வாதாரமாகவும் அமைந்துள்ளதாக நெடுந்தீவு மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு தமது நன்றிகளைத் தெரிவித்து வருகின்றனர்

Related posts:

வடக்கில் வாக்காளர் பதிவை சொந்த வதிவிடத்தில் பதிய முடியவில்லை -  டக்ளஸ் தேவானந்தா சபையில் சுட்டிக்காட...
மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் - அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க எவ்வாறான நிலைபாட்டில் இருந்தார் என்பது முக்கியமல்ல – சாதித்துக்...

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா – நா...
கோட்டபயவின் வெற்றியில் உங்கள் வெற்றியை உறுதி செய்யுங்கள்: மறவன்குளம் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி ...
ரின் மீன் உற்பத்தியை விருத்தி செய்து ஏற்றுமதியை அதிகரிக்க விரிவான நடவடிக்கை – அமைச்சர் டக்ளஸ் தெரி...