நெடுந்தீவில் பருவகால நன்னீர் மீன் வளர்ப்பு திட்டம் ஆரம்பம்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தினால் 350 குடும்பங்ளுக்கு 16 இலட்சம் வருமானம்!

Monday, December 23rd, 2019

பருவ கால நன்னீர் மீன் வளர்ப்பை அபிவிருத்தி செய்யும் நோக்கில் சுமார் 75,000 மீன் குஞ்சுகள் நெடுந்தீவு நீர் நிலைகளில் விடப்பட்டுள்ளன.

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் குறித்த கருத்திட்டமானது தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் முதற் கட்டமாக நெடுந்திவில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் நெடுந்தீவு பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீர் நிலைகளான நெலுவிலி குளம்(15000 மீன் குஞ்சுகள்), வடக்குறாவெளி குளம்(15000 மீன் குஞ்சுகள்), பெரிய வெட்டுக்கிளி குளம்(15000) மற்றும் சமனன் குளம்(30000) ஆகிய குளங்களில் சுமார் 2 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுதிமதியான 75000 மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: