நெடுந்தீவில் இந்தியன் முருங்கைச்செடி செய்கையை ஊக்குவிக்க உடன் நடவடிக்கை – நெடுந்தீவு விவசாயிகளிடம் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Monday, July 27th, 2020

நெடுந்தீவு பிரதேச விவசாயிகளை ஊக்குவிக்கும் முகமாக அவர்களின் உற்பத்திகளை மேம்படுத்துவதுடன் பொருளாதாரத்தையும் அதிகரிப்பதற்காக   இந்தியன் முருங்கை செடி செய்கையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை  மேற்கொண்டுதரப்படும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

நேற்றையதினம் நெடுந்தீவு பகுதிக்கான விஜயத்தை மேற்கொண்டு சென்றிருந்த  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அப்பிரதேசத்தின் விவசாயிகளுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த விவசாயிகள் தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுசென்றிருந்தனர்.

அத்துடன் தமது பிரதேசத்திற்கு ஏற்ற விவவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஏதுநிலைகளை பெற்றுத்தருமாறும் அமைச்சரிடம் கோரிக்கைவிடுத்திரந்தனர்.

இதன்போதே குறித்த பயிற்செய்கையை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுதருவதாக தெரிவித்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விவசாயிகளுக்கு இலகுகடன் வசதியையும் விரைவில் கிடைப்பதற்கு நடவடிக்கை செய்து தருவதாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

குறுகிய சுயலாப அரசியலை தூக்கி எறிந்தால் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாது - டக்ளஸ் எம்.பி...
பாதுகாப்பற்ற ரயில் கடவைகளின் பாதுகாப்பு நடவடிக்கைகள் கருதி உடனடியாக முன்னெடுக்கப்படக்கூடிய ஏற்பாடுகள...
கொழும்பு விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலய சிறப்பு நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவான...