நெடுந்தீவின் இளையோர் அமைப்பு வியக்க வைக்கிறது : அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!

Sunday, July 26th, 2020

வடபகுதியில் பரந்துபட்டளவில் உருவாக்கம் பெறாத இளையோர் அமைப்பு நெடுந்தீவில் பாரிய விருட்சம் போல் அமையப்பெற்றது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவு  இளையர்களின் வாழ்வில் ஒரு ஒளிமயமான  எதிர்காலத்தை அமைத்து தருவேன் எனவும் உறுதி அளித்துள்ளார்.

நெடுந்தீவு இளையோர் அமைப்புடனான இன்றைய சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “நான் தேர்தல் வெற்றியை மையமாக கொண்டு இந்த கருத்தை உங்களிடம் கூறவில்லை. இது எனது மக்களின் மீதான நான் கொண்ட எனது விருப்பம், அக்கறை கடமை.

எனவே உங்களின் வாழ்வு வளமானதாக அமைய ஈ.பி.டி.பியுடன் இணைந்து பயணிக்குமாறு உங்களை அன்போடு கேட்கின்றேன்” என்றுஅவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெடுந்தீவு கடற்தொழிலாளர் சமாசங்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தடை செய்யப்பட்ட மீன் பிடி முறைகள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்படும் என்று உறுதிளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: