நீர் நிலைகளில் மீனினக் குஞ்சுகளை விடுவதற்கு மேலும் 200 மில்லியன் நிதி ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
Tuesday, December 12th, 2023நீர் நிலைகளில் மீனினக் குஞ்சுகளை விடுவதற்கு இந்த வருடத்தில் எமது அரசாங்கம் 100 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. அடுத்த வருடத்திற்கென மேலும் 200 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது. இந்த நிதியினைக் கொண்டு, நாட்டில் பரவலாக நீர் நிலைகளில் மீனினக் குஞ்சுகளை விடவுள்ளதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
கடற்றொழில் அமைச்சு தொடர்பிலான சபை வாத – விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.-
இதன்போது அவர் மேலும் கூறுகையில் –
2022ஆம் ஆண்டினைப் பொறுத்தவரையில் எமது நாட்டின் நீர் வேளாண்மை உற்பத்தியானது சுமார் 11,600 மெற்றிக் தொன்களாகவே இருக்கின்றன. எமது நாட்டின் நீர் சார்ந்த இயற்கை வளங்களும், திறமையான மனித வளமும் ஒன்று சேருமிடத்து நீர் வேளாண்மையை மிக உயரிய அளவுக்குக் கொண்டுவர முடியும். குறிப்பாக, உவர் மற்றும் நன்னீர் மீனினங்கள், இறால், நண்டு, கடல்பாசி போன்றவை எமது நாட்டு மக்களின் உயர்தர போசாக்குக்கு மாத்திரமின்றி, ஏற்றுமதி பொருளாதாரத்திலும் முக்கியத்;துவமிக்கவை. அதேபோன்று, கடலட்டையானது பாரிய அந்நியச் செலாவணியை ஈட்டித்தரத்தக்கது. இவை அனைத்துத் திட்டங்களும் அதிக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கித்தரக் கூடியவையாகும்.
அந்த வகையில் இத்துறை சார்ந்து எமது அமைச்சின் கீழுள்ள தேசிய நீர்வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையினதும் (Nயுஞனுயு)இ தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவகத்தினதும், (Nயுசுயு) ஒத்துழைப்புகள் எமக்குக் கிடைத்து வருகின்றன.
தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவகமானது (Nயுசுயு) எமது செயற்பாடுகளுக்கு உரிய பங்களிப்பினை வழங்கி வந்தாலும்கூட, அவர்கள் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடாமை காரணமாக இந்த நிறுவகம் எதையுமே செய்வதில்லை என சிலர் கூறிவருகின்றனர். இது தவறு என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தைப் பொறுத்த வரையில் இதுவரையில், கண்டி மாவட்டத்தில் 04, கேகாலை மாவட்டத்தில் 07, அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 04, மாத்தறை மாவட்டத்தில் 07, இரத்தினபுரி மாவட்டத்தில் 04, பதுளை மாவட்டத்தில் 06, களுத்றை மாவட்டத்தில் 07, காலி மாவட்டத்தில் 06, கொழும்பு மாவட்டத்தில் 15, கம்பஹா மாவட்டத்தில் 28, குருனாகலை மாவட்டத்தில் 06, அனுராதபுரம் மாவட்டத்தில் 04, திகாமடுல்ல மாவட்டத்தில் 01 என மொத்தமாக 97 விற்பனை நிலையங்கள் செயற்பட்டு வருகின்றன.
இவற்றில் அனைத்து விற்பனை நிலையங்களும் இலாபம் ஈட்டுவதாக இல்லை. எனவே, அவற்றை இலாபம் ஈட்டக்கூடிய வகையில் மறுசீரமைக்க வேண்டியத் தேவையும், இத்தகைய மீன் விற்பனை நிலையங்கள் இல்லாத பகுதிகளில் மேலும் மீன் விற்பனை நிலையங்களை அமைக்க வேண்டியத் தேவையும் இருக்கின்றது.
அத்துடன், தற்போது இலங்கை கடற்றொழில் திணைக்களத்திற்குரிய விடுமுறை விடுதிகளை சுற்றுலாத்துறை மேம்பாட்டு அதிகார சபையின் வழிகாட்டலுக்கமைய அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகின்றோம்.
மன்னார் மற்றும் திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபன அலுவலக வளாகங்களில் வாகன சேவைகள் நிலையங்களையும், எரிபொருள் வழங்கும் நிலையங்களையும் அமைத்து வருகின்றோம்.
நாடளாவிய ரீதியில் கூட்டுத்தாபனத்திற்குரிய காணிகளில் தனியார்த்துறையினருடன் இணைந்த வர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.
எனவே, வெகு விரைவில் இலங்கை கடற்றொழில் திணைக்களத்தினை நட்டமில்லாத ஒரு நிறுவனமாக மாற்ற இயலும் என நம்புகின்றேன்.
000
Related posts:
|
|