நீர்ப்பாசன வேலைத்திட்டங்கள் தொடர்பில் அமைச்சர்களான சமால் ராஜகன்ச மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் யாழ்ப்பாணத்தில் விஷேட ஆய்வு!

Wednesday, July 22nd, 2020

யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பாசன வேலைத் திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்த நீர்ப்பாசண மற்றும் விவசாய அமைச்சர சமல் ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்ட மீளாய்வுக் கூட்டம் சரசாலையில் அமைந்துள்ள யாழ் குடாநாட்டிற்கான குடிநீர்வழங்கல் திட்ட பணிப்பாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதனிடையே வடமாராட்சி உப்பாறு பிரதேசத்தில் மழை நீரை சேமித்து யாழ். குடாநாட்டிற்கான குடிநீரை வழங்கும் பாரிய திட்டம் விவசாயம் மற்றும நீர்பாசணத் துறை அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னிலையில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களில் குறித்த திட்டத்தினூடாக மக்கள் பலனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:


இயற்கை அனர்த்தம் வேதனை தருகிறது! இலங்கை அரசு, இந்தியா உட்பட வெளிநாடுகளினதும், எமது மக்களினதும் மனி...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும் - யாழ் பல்கலை மாணவர் மத்தியில் டக்ளஸ் தேவான...
கொலைகளை நியாயப்படுத்தியவர்களே இன்றைய இதர தமிழ் அரசியல் வாதிகள் – சபையில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ...