நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் தமிழ் சமூகத்தை சீரழித்துள்ளது – சர்வமத பிரதிநிதிகள் சந்திப்பில் டக்ளஸ் தேவானந்தா

Tuesday, June 13th, 2017

நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் போன்ற காரணங்களினால் பின்னடைவு கண்ட தமிழ் சமூகத்தை மீட்டெடுப்பதற்கு சர்வமத தலைவர்கள் முன்வந்துமையானது மகிழ்ச்சியளிக்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சயின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சர்வமத தலைவர்களுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

நீண்டகால யுத்தம் காரணமாக பின்னடைவு கண்ட தமிழ்ச் சமூகம் காலமாற்றத்தில் முன்னேற்றம் காணவேண்டிய பொறுப்பபை உணர்ந்துகொண்டு அதிலிருந்து மக்களை மீட்டெடுக்கும் பொருட்டு முன்வந்துள்ள சர்வமதக் குழுவின் முயற்சி பாராட்டத்தக்கது.  இவ்வாறான முயற்சிகளினூடாகவே பலவழிகளிலும் பின்னடைவு கண்ட எமது சமூகத்தை சமூக விழிப்புணர்வோடு புதிய மாற்றத்தையும் ஏற்றத்தையும் கொண்டுவரும் வகையில் சர்வமதப்பிரதிநிதிகள் தமது பொறுப்புக்களை அர்ப்பணிப்புடனும் சேவை மனப்பான்மையுடனும் செயலாற்ற முன்வரவேண்டும்.

மனிதநேயம் தான் எனது மதக்கொள்கையாக வகுத்து, அதன்படி எப்போதும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றேன். பொதுவாக, விபூதி அணியாத இந்துவாகவும், சிலுவை அணியாத கிறிஸ்தவனாகவும். குல்லா அணியாத முஸ்லிமாகவும், காவி அணியாத பௌத்தனாகவும் என்னை அடையாளம் காட்டிக்கொள்ளவே நான் விரும்பகின்றேன். அந்தவகையில்தான் ஒரு மதம் இன்னொரு மதத்தை நசுக்குவதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது சுட்டிக்காட்டினார்.

மேலும் இன்றைய இளைய சமூகம் போதைவஸ்து, மதுப்பாவனை, வாள்வெட்டு, கொலை கொள்ளை போன்ற சமூகவிரோத செயல்களையும் கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலான செயற்பாடுகளை தடுத்து நிறுத்துவதற்கும் சமூகத் தலைவர்கள் முன்வரவேண்டும்.

சமூகவிரோத செயற்பாடுகளை  கட்டுப்படுத்துவதற்கு அல்லது இல்லாதொழிப்பதற்கு இளைய சமூகத்தினர் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டல்களை முன்னெடுப்பதுமட்டுமன்றி இவ்வாறான செயற்பாடுகளுக்கு சமயத் தலைவர்கள் தமது பொறுப்புக்களை உணர்ந்துகொண்டு செயலாற்றவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இதன்போது சமய தலைவர்களது கருத்துக்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

ஓய்வுபெற்றுச் செல்லும் யாழ் மாவட்ட தனியார் போக்குவரத்து சபை ஊழியர் இராசரத்தினம் அவர்களை பொன்னாடை போர...
டக்ளஸ் தேவானந்தாவுடன் பேசி நிலங்களை விடுவித்தேன்: எஞ்சிய நிலங்களையும் விடுவிப்பேன் - யாழ்ப்பாணத்தி...
அராலி வள்ளியம்மை வித்தியாலய கட்டிட புனரமைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!